வாழைக்கிழங்கு வலிமையை தெறித்து கொள்ளுங்கள்…!

Related image

வாழை மரத்தில் பழம், பூ, தண்டு, இலை, காய் என எல்லாவற்றுக்கும் மருத்துவப் பயன்கள் இருப்பதை அறிவோம். அதுபோல வாழை மரத்தில் வேர் பகுதியில் இருக்கக்கூடிய வாழைக் கிழங்கும் பல்வேறு மருத்துவ குணங்களை உடையது. பூவன், செவ்வாழை, ரஸ்தாளி, நேந்திரம் என எந்த வாழைக் கிழங்கையும் நாம் மருந்தாகவோ, உணவாகவோ பயன்படுத்தலாம். 

Image result for வாழைக்கிழங்கு

வாழைத்தண்டுக்கு உள்ள அனைத்து சத்துக்களும் வாழைக்கிழங்குக்கும் உள்ளது. இதை வாழைத்தண்டு பயன்படுத்துவது போல சாம்பாராகவோ, சூப்பாகவோ, பொரியலாகவோ பயன்படுத்தி அதன் பயன்களை பெறலாம்.மேலும் இது சிறுநீரகப் பாதையை தூய்மைப்படுத்தும் பணியை செய்கிறது. உயர் ரத்த அழுத்தத்தால் அவதிப்படுபவர்கள் வாழைக்கிழங்கினை சாறாகவோ அல்லது உணவாகவோ பயன்படுத்தி வந்தால் ரத்த அழுத்தம் சமநிலைக்கு வரும். இதில் வைட்டமின் பி 6 அதிக அளவில் உள்ளது. 

Related image

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்தும். சிறுசீரக பாதிப்பு இருப்பவர்கள் வாழைக்கிழங்கினை வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு உட்கொள்ள வேண்டும்.வாழைக்கிழங்கு நெஞ்செரிச்சலைப் போக்குகிறது. வயிற்றில் அமில பிரச்னை இருப்பவர்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருவது நல்லது.  வயிற்றின் அமிலத்தன்மையை சமநிலைப்படுத்தி நெஞ்செரிச்சல், நெஞ்சு உறுத்துவது போல் இருப்பது போன்ற பிரச்னைகளை தீர்க்கிறது.

Image result for வாழைக்கிழங்கு


வாழைக்கிழங்கு சாறுடன் கொடுக்க பேதி, பெரும்பாடு நோய் குணமடைகிறது. வாழைக்கிழங்கு சாறுடன் நெய் அல்லது வெண்ணெய் கூட்டி கொடுக்க, நீர் சுளுக்கு, கல்லடைப்பு குணமாகும். இது வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை குறைக்கிறது. தொப்பை தோற்றத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருகிறது. இது உடலில் உள்ள அதிக கொழுப்புச் சத்தைக் குறைக்க உதவுகிறது. 

Related image

வாழைக்கிழங்கு பயன்படுத்தும்போது சிறிதளவு இஞ்சி சேர்த்து கொள்வது எளிதில் செரிமானம் ஆகும். இது வளர்சிதை மாற்றத்துக்கும் உதவும். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. தொண்டை பகுதி முதல் மலக்குடல் வரை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. மலச்சிக்கல் ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொள்கிறது. 

Image result for வாழை


தீவிரமான சிறுநீரகக் கற்களை கூட உடைப்பதற்கு வாழை வேர் பகுதியில் இருக்கக்கூடிய கிழங்கு பயன்படுகிறது. சிறுநீரகக் கற்கள் பிரச்னை இருப்பவர்கள், தினமும் காலையில் வாழைக்கிழங்கு சாறை ஜூஸாக அருந்தி வந்தால் சிறுநீரக கற்கள் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து உடைந்து சிறுநீரோடு சேர்ந்து வெளியே வந்துவிடும்.

Related imageவெட்டிய வாழை மரத்தின் வேர் பகுதியை வெளியே எடுக்காமல் பூமிலே வைத்து அரை அடி ஆழத்திற்கு குடைந்து துணியால் மூடி வைத்தால் மறுநாள் காலையில் 100 மிலி அளவு உள்ள வாழை மர வேர்ச் சாறு தயாராக ஊறியிருக்கும். அதை சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர சிறுநீரகக் கற்கள் நீங்கும். 

Image result for வாழைக்கிழங்கு


சிறுநீர் கழிப்பதில் வலி, எரிச்சல், அடிக்கடி சிறுநீர் போக வேண்டும் என்ற எண்ணம், மாதவிலக்குக் கோளாறுகள் ஆகியவற்றை வாழைக்கிழங்கு குணமாக்கும் என ஆயுர்வேத நூல்கள் தெரிவிக்கின்றன. அடிபட்ட வீக்கங்களுக்கு வாழைக் கிழங்கை இடித்து அதிலுள்ள சாறைப் பிழிந்து எடுத்துவிட்டுத் திப்பியை அடிபட்ட வீக்கங்களுக்கு வைத்துக் கட்டுவதால் சீக்கிரத்தில் வீக்கமும் கரையும்; வலியும் குறையும். வாழைக்கிழங்கு உணவில் எடுத்துகொள்ளும்போது சருமம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்துகிறது. சருமம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்க உதவுகிறது.

Image result for வாழைக்கிழங்கு


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *