அயோத்தி தீர்ப்புக்கு பின் பிரதமர் மோடி குறித்து வெளிநாட்டு பத்திரிக்கை எழுதியது இதுதான்.!

தொடர்புடைய படம்

அயோத்தி வழக்கின் தீர்ப்பு, பிரதமர் மோடிக்கு கிடைத்த பெரிய வெற்றி என வெளிநாட்டு பத்திரிகைகள் பாராட்டு தெரிவித்துள்ளன.

வரலாற்று சிறப்புமிக்க அயோத்திய தீர்ப்பு, நவ.,9ம் தேதி வெளியானது. இது குறித்து உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. அதில், இந்த தீர்ப்பு மோடிக்கு கிடைத்த பெரிய வெற்றி என பாராட்டியுள்ளன.

modi ayodhya foreign news paper க்கான பட முடிவு

அமெரிக்க முன்னணி பத்திரிகையான ‘நியூயார்க் டைம்ஸ்’ வெளியிட்ட செய்தியில், பல நூற்றாண்டுகளாக நீடித்த அயோத்தி விவகாரத்தில் ஹிந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் இந்தியாவை மறுசீரமைப்பதில் மோடிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.

மற்றொரு அமெரிக்க நாளிதழான ‘வாஷிங்டன் போஸ்ட்’, மோடியின் பெரிய வெற்றியான அயோத்தி தீர்ப்பின் மூலம், பாஜ.,வின் முக்கிய லட்சியம் நிறைவேறியுள்ளது, என பாராட்டியது.

new york times about ayodhya க்கான பட முடிவு

பிரிட்டனின் ‘கார்டியன்’ நாளிதழில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி அமோக வெற்றி பெற்றார். அயோத்தி தீர்ப்பு மூலம் மீண்டும் மகத்தான வெற்றி கிடைத்துள்ளது, என வெளியிட்டது.

ஆனால், பாகிஸ்தானின் நாளிதழ்களில் மட்டும், எதிர்மறையாக, அயோத்தி தீர்ப்பால் ஹிந்துக்கள், முஸ்லீம்கள் இடையிலான உறவு பாதிக்கப்படும் என செய்தி வெளியிட்டுள்ளது.

pakistan news papers க்கான பட முடிவு

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *