இந்திய எல்லை பாதுகாப்புப் படையில் காலி பணியிடங்கள், விண்ணப்பிக்க சரியான நேரம் !!

Image result for bsf india

எல்லை பாதுகாப்பு படையில் (பி.எஸ்.எஃப்) 1,356 கான்ஸ்டபிள் பதவிகள் காலியாக இருப்பதாக விளம்பரம் வெளியாகியுள்ளது. இதற்கு நவம்பர் 7-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். எல்லை பாதுகாப்பு பணியில் சேர ஆர்வமும், தகுதியும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நவம்பர் 14-ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான bsf.nic.in -ல் விண்ணப்பிக்கவும்.

ஜம்மு-காஷ்மீர், மற்றும் லடாக்கின் யூ.டி.க்களைச் சேர்ந்தவர்கள் கான்ஸ்டபிள் (ஜி.டி) பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் மெட்ரிகுலேஷன் அல்லது 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆகஸ்ட் 1, 2019 நிலவரப்படி விண்ணப்பதாரர்களின் வயது 23-க்கு குறையாமல் இருக்க வேண்டும்.

Image result for bsf india

காலியிட விபரம் 

மொத்த காலியிடம் – 1356

கல்வித் தகுதி 

கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் அல்லது பல்கலைக்கழகத்தில் மெட்ரிகுலேஷன்அல்லது 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு 

ஆகஸ்ட் 1, 2019 தேதியன்று, விண்ணப்பதாரர்களின் வயது 23-க்கு குறையாமல் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை

எழுத்துத் தேர்வு, உடல் தர சோதனை (பி.எஸ்.டி), உடல் திறன் சோதனை (பி.இ.டி) அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள் 

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க நாள் : நவம்பர் 7

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 14, 2019.

Image result for bsf india

எவ்வாறு அப்ளை செய்வது? 

அதிகாரப்பூர்வ வலைத்தளமான bsf.nic.in – யை விசிட் செய்யவும்.

’அப்ளிகேஷன் ப்ராசஸ்’ என்பதை க்ளிக் செய்யவும்.

பெயர், கல்வித்தகுதி மற்ற விபரங்களை பதிவிடவும்.

தேவையான சான்றிதழ்களை அப்லோட் செய்யவும்.

பின்னர் ‘சப்மிட்’ என்பதை க்ளிக் செய்யவும்.

அதை டவுன்லோடு செய்து, பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *