சுடிதாரில் OPS மனைவி..,சிகாகோ நகரில் செம கலக்கல்.!

 

Image

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்திற்கு சிகாகோ விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் அவருடைய மனைவி மற்றும் மகனும் தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.பி ரவீந்திரநாத் குமாரும்  சென்று உள்ளார்.

இதனைதொடர்ந்து சிகாகோ நகரில் குழந்தைகள் தின நிகழ்ச்சியில் துணை முதல்வர் கலந்து கொள்கிறார்.

வரும் 12 ஆம் தேதி தொழில் நிறுவனங்கள் தொடர்பான வட்டமேசை கருத்தரங்கில் கலந்து கொள்கிறார்.

13ஆம் தேதியன்று வாஷிங்டன் செல்கிறார் 14ஆம் தேதியன்று ஹூஸ்டன் நகருக்கு செல்லும் அவர் தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்வது குறித்து மிக முக்கிய உரை நிகழ்த்தவுள்ளார்.

இதற்கிடையில் நாளை நடைபெறும் விழாவில் துணை முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு “இன்டர்நேஷனல் ரைசிங் ஸ்டார் ஆஃப் தி இயர் ஏசியா அவார்டு” வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.

பின்னர் மேலும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் துணைமுதல்வர் வரும் 17ஆம் தேதியன்று சென்னை திரும்ப உள்ளார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் துணை முதல்வரின் மனைவியும் சிகாகோ சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது மிக அழகான சுடிதார் அணிந்து மாடர்ன் லுக்கில் காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு முன், துணை முதல்வர் மற்றும் அவருடைய மனைவி இருக்கும் புகைப்படத்தில் சேலையில் இருப்பதை மட்டுமே பார்த்து இருப்போம்.Image

ஆனால் தற்போது சிகாகோவில் சுடிதார் ஆடையில் மாடர்னாக காணப்படுகிறார்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *