இனி வாரத்திற்கு ! உங்களுக்கு 3 நாட்கள் விடுமுறை..! அனைத்து ஊழியர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்..!

Image result for microsoft office area

உலகில் பல முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்காக சில முக்கிய கோட்பாடுகளை வைத்துள்ளது.   அந்த வகையில் வாரத்தில் 3 நாட்கள் வேலை செய்தும், மீதமுள்ள நேரத்தில் அவர்களது வாழ்க்கை சார்ந்த விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்ற நோக்கில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டு வருகிறது. அதன்படி வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே ஊழியர்கள் பணிக்கு வந்தால் போதுமானது. மற்ற மூன்று நாட்கள் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கலாம் என ஓர் புதிய திட்டம் குறித்து பரிசீலனை செய்து இப்ப செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.

Image result for microsoft office area

இது தொடர்பாக ஒரு சோதனையை நடத்த கடந்த ஆகஸ்ட் மாதம் ஜப்பானில் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவன கிளையில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 2300 ஊழியர்களுக்கு சனி ஞாயிறு மற்றும் கூடுதலாக வெள்ளிக்கிழமையும் சேர்த்து மூன்று நாட்கள் விடுமுறை அளித்தது.  அதன்பிறகு அவர்களின் பணியை சோதித்துப் பார்த்தபோது முன்பு எப்போதும் இருந்ததை விட சற்று அதிகமாக இருப்பதும் வேலையில் நேர்த்தியாகவும் விரைவாகவும் இருப்பதாகவும் கண்டறியப்பட்டது. இதன் பின்னர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் சிஇஓ டக்குயா கிரானோ (Takkuya kirano) இது குறித்து தெரிவிக்கும் போது,    ஊழியர்கள் தங்கள் வாழ்வை முழுமையாக வாழ்ந்தால்தான் வேலையில் திறம்பட அவருடைய சிந்தனையை இருக்கும் அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வேலைச்சுமையும் குறையும். இது நிறுவனத்திற்கும் நல்ல ஒரு லாபத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என தெரிவித்துள்ளார்.

Image result for microsoft office area

 

ஆனால் இந்தியாவில் பல்வேறு நாடுகளில் அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் விடுமுறை நாட்கள் தான் பெரும் ஆச்சரியமாக இருக்கும். பல நிறுவனங்கள் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை கொடுப்பதற்கே மூக்கால் அழுவார்கள். அதில் ஒரு நாள் அதிகமாக எடுத்தாலும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வருகிறது. ஆக மொத்தத்தில் லீவு எடுப்பதற்காகவே அவர்கள் மேற்கொள்ளும் முயற்சி மனதளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாகாவே இன்றளவும் மக்களுக்கு அரசு வேலையின் மீது ஆர்வம் அதிகம் உண்டு. ஆனால் அதை எல்லாம் மீறி தற்போது மைக்ரோசாப்ட் நிறுவன ஊழியர்களுக்குஅறிவிக்கப்பட்டு உள்ள வாரத்தில் 3 நாள் விடுமுறை செய்தி அந்நிறுவன ஊழியர்களுக்கு பெரு மகிழ்ச்சி கொடுத்து உள்ளது.

Related image

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *