விமான சர்ச்சையில் இப்போது பாஜக..? மோடி ஊரில் இத்தனை கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதா.?

முதல்வர் மற்றும் ஆளுநரின் பயணங்களுக்காக ₹191 கோடிக்கு புது விமானம்..!

பிரதமர் மோடி இன்று நாட்டுக்கே பிரதமர் ஆனாலும், அவர் என்றுமே அறியப்படுவது குஜராத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த ஏழை தாயின் மகனாகத்தான்.

Gujarat,Prime Minister,Narendra Modi,meets,mother,residence,Gandhinagar

குஜராத்தில் முதல்வராக உள்ள பாஜக-வின் விஜய் ரூபானி சுற்றுப்பயணங்கள் மேற்கொள்வதற்காக விமான ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த விமானத்தின் விலைதான் இப்போது சாமானிய மக்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

குஜராத் முதல்வரான, பாஜக-வை சேர்ந்த விஜய் ரூபானி, கவர்னர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பயணிப்பதற்காக, 191 கோடி ரூபாயில் புதிய விமானம் வாங்கப்படுகிறது. வட அமெரிக்க நாடான கனடாவைச் சேர்ந்த, ‘பம்பார்டியர்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்த புதிய விமானம், மூன்று வாரங்களுக்குள் வந்து சேரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர், ரூ. 191 கோடி, விமானம்

ரபேல் ஊழலில் பல கோடிகள் பேரம் பேசப்பட்டது பற்றி பேசாத வாய் இல்லை, இன்று ஒரு மாநிலத்தின் முதல்வர் 191 கோடி ரூபாயில் விமானம் வாங்குவது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருள் ஆகி இருக்கிறது.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *