ஆரஞ்சு பழம் சாப்பிட்டால் அதுனால் ஏற்படும் நன்மைகள் மாற்றங்கள்!

Image result for orange
பழங்களில் மிகவும் சிறந்தது ஆரஞ்சு பழம் ஆகும். இதில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் மற்றும் சத்துக்களும் நிறைந்துள்ளது.இப்பொழுது நாம் ஆரஞ்சு பழத்தில் உள்ள சத்துக்களை பற்றி காண்போம்.

நாம் உண்ணும் ஒரு ஆரஞ்சு பழத்தில் விட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம், விட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளது.

ஆரஞ்சு பழத்தில் லெமோனாய்டுகள் என்னும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இந்த பழத்தை சாப்பிட்டால், பல வகையான புற்றுநோய்கள் வருவதை தடுக்கலாம்.

ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது

அனைத்து பழங்களுமே ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. அதிலும் ஆரஞ்சு பழத்தில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் அதிகமாக உள்ளது.இது உங்கள் உடலில் பிரீ ராடிக்கல் செல் அழிவு மற்றும் ஆக்ஸிடேஷன் ஏற்படாமல் காக்கும்.மேலும் உங்களை இளமையாக வைக்க உதவும்.

முடி கொட்டுதலை தடுக்கும்

ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது உங்களுக்கு முடி கொட்டுதலை தடுத்து முடி வளர வழி வகுக்கும். எனவே இதனை ஆரோக்கியம் நிறைந்த ஆரஞ்சு பலத்தினை தினமும் உட்கொண்டு வாருங்கள் நண்பர்களே.

Image result for Eating orange

அதிக அளவு வைட்டமின் சி உள்ளது

ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது.100 கிராம் ஆரஞ்சு பழத்தில் கிட்டத்தட்ட 53 மில்லிகிராம் வைட்டமின் சி உள்ளது. வைட்டமின் சி, உடலுக்கு மிகவும் முக்கியம் வாய்ந்தது.எனவே தினமும் ஒரு ஆரஞ்சு பலத்தினை உட்கொண்டு வாருங்கள் நண்பர்களே.

இரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைக்கின்றது

ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. பொட்டாசியம் உங்கள் இரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைக்க முக்கிய பங்கு வகிக்கின்றது. எனவே இரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைக்க தினமும் ஆரஞ்சு பலத்தினை உட்கொண்டு வாருக்குங்கள்.

நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும்

ஆரஞ்சு பழத்தில் அதிக அளவில் உள்ள வைட்டமின் சி உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். மேலும் இது உங்களுக்கு நோய் வராமல் பாதுகாக்க உதவும். எனவே தினமும் இதை உண்டு வாருங்கள் நண்பர்களே.

Image result for Eating orange

மலச்சிக்கலை போக்கும்

மலசிக்கல் என்பது அனைவரும் சந்திக்கும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று ஆகும். அதிலும் ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் அவை உங்களுக்கு மலசிக்கல் ஏற்படாமல் தடுக்க உதவும்.

மேலும் உங்கள் குடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்த உதவும். எனவே ஆரஞ்சு பழத்தினை உட்கொண்டு வாருங்கள் நண்பர்களே.

புற்று நோயினை தடுக்கும்

ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் உள்ளது. இது உங்களுக்கு புற்று நோய் ஏற்படாமல் காக்க உதவுகின்றது. தினமும் ஆரஞ்சு பழம் உண்டு வரும் பெண்களுக்கு 50 சதவீதம் புற்று னாய் வருவது குறைவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

எப்போதும் இளமையான சருமம்

ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இது உங்களுக்கு இளமையான மற்றும் ஆரோக்கியமான சருமத்தினை அளிக்கும். எனவே ஆரோக்கியமான மற்றும் ஒளிரும் சருமத்தினை பெற ஆரஞ்சு பழத்தினை உட்கொண்டு வாருங்கள் நண்பர்களே.

Related image

இரத்த சர்க்கரை அளவினை கட்டுக்குள் வைக்கும்

ஆரஞ்சு பழத்தில் உள்ள அதிக அளவு நார்சத்து உங்கள் இரத்தத்தில் உள்ள தேவையற்ற சர்க்கரையினை குறைக்க உதவுகின்றது.எனவே இரத்த சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைக்க தினமும் ஆரஞ்சு பழத்தினை உண்டு வாருங்கள்.

தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவும்

உடலில் தேங்கும் தேவையற்ற கொழுப்புகள் பலவித பிரச்சினைகளை ஏற்படுத்தும். முக்கியமாக இருதய கோளாறு, இரத்த கொதிப்பு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஆரஞ்சு பழத்தில் உள்ள நார்ச்சத்தானது உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவுகின்றது.

இவ்வளவு நன்மைகள் கொண்ட ஆரஞ்சு பழத்தை நீங்கள் தினமும் உண்ணலாமே..

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *