பெண்கள் கர்ப்பகாலத்தில் முக்கியமாக சாப்பிடவேண்டியவை!

Image result for pregnant lady
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். ஏனெனில் இந்த சத்துக்கள் தான் கருவில் உள்ள சிசுவின் வளர்ச்சியை அதிகரிக்கக்கூடியது.

அதிலும் புரோட்டீன் கருவின் வளர்ச்சியை சீராக வைக்கவும், கால்சியம் குழந்தையின் எலும்புகள் வலுவோடு இருப்பதற்கும் உதவும். குழந்தையின் மூளை வளர்ச்சியும் அறிவுத்திறனும் அப்போது தான் மேம்படும். மேலும் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியும் மேம்படுகிறது.

இந்த பகுதியில் நீங்கள் கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய சில உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

கால்சியம், இரும்புச்சத்து

பசலைக் கீரையில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், தாயின் உடலில் இரத்தமானது அதிக அளவில் உற்பத்தியாவதோடு, கருவில் உள்ள சிசுவிற்கும் அதிக அளவில் இரத்த ஓட்டமானது அதிகரிக்கும்.பாதாமில் வைட்டமின் ஈ, ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் புரோட்டீன் அதிகமாக நிறைந்துள்ளது.

Image result for palak images

பாதாம்

பாதாமில் வைட்டமின் ஈ, ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் புரோட்டீன் அதிகமாக நிறைந்துள்ளது. ஆகவே அதிக அளவில் கர்ப்பிணிகள் சாப்பிட, கருவிற்கு தேவையான புரோட்டீன் சத்தானது கிடைக்கும்.

ஆகவே அதிக அளவில் கர்ப்பிணிகள் சாப்பிட, கருவிற்கு தேவையான புரோட்டீன் சத்தானது கிடைக்கும்.ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், அவை தாயின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்றுநோய்கள் எதுவும் தாக்காமல் தடுப்பதோடு, அதில் உள்ள ஃபோலிக் ஆசிட் குழந்தை பிறப்பதில் உண்டாகும் பிரச்சனையை தடுக்கும்.

Related image

மீன்

பொதுவாகவே மீனில் ஒமோக-3 ஃபேட்டி ஆசிட், கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் இருப்பதால், கர்ப்பிணிகள் மீன் சாப்பிடுவது நல்லது. ஆனால் அவற்றில் சால்மன் என்ற மீனில் மற்ற மீன்களை விட, அதிகமான அளவில் இத்தகைய சத்துக்கள் நிறைந்துள்ளன.

Related image

முட்டை

முட்டையில் அதிக அளவில் புரோட்டீன் நிறைந்திருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. ஆகவே கர்ப்பிணிகள் தினமும் 2 முட்டைகளை சாப்பிட்டு வருவது, தாய்க்கு மட்டுமின்றி, குழந்தைக்கும் நல்லது.

Image result for egg

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *