காலை உணவை தவிர்ப்பவரா நீங்கள் உங்களுக்கு இந்த அறிகுறிகள் நிச்சம் தென்படும்.. உஷாராக இருங்கள்.!

உணவு ஒவ்வொரு உயிரினத்திற்கும் மிகவும் முதன்மையான ஒன்றாக கருதப்படுகிறது. உலகில் வாழும் எல்லா வகையான ஜீவராசிகளுக்கும் உணவே அடிப்படை.

உணவின்றி இந்த பூமியில் எந்த உயிரினமும் இயங்காது. இப்படி பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட உணவை நாம் சரியான நேரத்திலும், ஆரோக்கியமான முறையிலும் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.

காலை உணவு க்கான பட முடிவு

ஒருவர் காலை உணவை சாப்பிடாமல் தவிர்த்தால் உடலில் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பதை பற்றி தெரிந்துக்கொள்வோம்.

காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் :

காலை உணவை தவிர்ப்பதால் சர்க்கரை நோய் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

சர்க்கரை நோய் க்கான பட முடிவு

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்கு தேவையான சக்தியையும், ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் மூளையின் செயல்பாட்டை குறைத்து விடுகிறது.

காலையிலிருந்து மதியம் வரை எதுவுமே சாப்பிடாமல் இருக்கும் டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகி விடுகிறது.

மதிய உணவிலும், இரவு உணவிலும் பெறப்படும் மாவுச்சத்தின் அளவு குறைந்திருந்தால் பிரச்சனை இருக்காது. ஆனால் காலை உணவை தவிர்ப்பதால் நிச்சயம் சிக்கல்தான்.

காலை உணவில் சிக்கல் க்கான பட முடிவு

காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு இதயம் சார்ந்த நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

காலையில் சாப்பிடாமல் இருக்கும்போது சர்க்கரை அளவு குறைந்து, ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதனால் ஒற்றை தலைவலி உண்டாகும்.

காலை உணவை தவிர்த்தால் உயர் ரத்த அழுத்த நோய்கள் ஏற்படும். மேலும், உடலில் ரத்த ஓட்டத்தை பாதித்து, செயல்பாட்டை குறைத்து விடுகிறது.

காலை உணவை தவிர்த்தாலோ அல்லது சரியாக சாப்பிடாமல் இருந்தாலோ பசியின்மை ஏற்படும். இதனால் உடல் எடை கூடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

உடல் எடை க்கான பட முடிவு

காலையில் ஏதேனும் ஒரு உணவை சாப்பிடுபவர்களை விட, காலை உணவை முற்றிலுமாக தவிர்ப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

காலை நேரத்தில் பணிக்கு செல்லும் அவசரத்தில், சாப்பிடாமல் செல்வோர், இனி சற்று நேரம் ஒதுக்கி காலை உணவை சாப்பிட்டுவிட்டு செல்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

 

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *