உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு.. ஒரேடியாக 40,000 பேருக்கு வேலை பறிபோக வாய்ப்பு.?

தொடர்புடைய படம்

ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா, ஜியோ மற்றும் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்காளுக்கு, மத்திய டெலிகாம் துறை கோரிய 92,642 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ஒரு புறம் ஜியோவோடு போட்டிப்போட்டு பல ஆஃபர்களை அறிமுகம் செய்து தங்களது லாபத்தை விட்டுகொடுத்தாலும், மறுபுறம் பெரும் கடனாளிகளாகவும் மாறினர். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் அடுத்த ஆறு மாதங்களில் 40,000 வேலைகள் குறைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே கடனை அடைக்க முடியாமல், ஜியோவின் போட்டியையும் சமாளிக்க முடியாமலும் தவித்து வரும் இந்த நிறுவனங்களுக்கு, உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மேலும் பெருத்த அடியை கொடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஏர்டெல் வட்டாரங்களில், ஏர்டெல் நிறுவனம் செலுத்த வேண்டிய மொத்த தொகையில் 23.4 சதவிகிதம், 21,682 கோடி ரூபாய் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இது எதிர்கால வருவாயில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும், மேலும் இந்த தொகை குறித்தான எந்தவொரு கடிதமும் டெலிகாம் நிறுவனங்களிடம் இல்லாத நிலை உள்ளது. இதனால் முதலீட்டாளர்களிடத்தில் இது குறித்து எப்படி பதில் அளிப்பது என்ற தெளிவு இல்லாத நிலையே உள்ளது என்றும் கூறப்படுகிறது.

பாரதி ஏர்டெல் க்கான பட முடிவு

இது போன்ற அடுத்தடுத்த பிரச்சனைகளால் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மீண்டு வருமா? அப்படியே வந்தாலும், வேலையிழப்பு, கட்டணங்கள் அதிகரிப்பு இருக்கலாம் என்றும் நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *