இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் இந்திய பட்டதாரிகளுக்கு அரிய வேலைவாய்ப்பு !!

Image result for indian oil corporation

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐ.ஓ.சி.எல்) நிறுவனம், ஜூனியர் இன்ஜினியரிங் உதவியாளர்களுக்கான (ஜே.இ.ஏ) ஆட்சேர்ப்பு விண்ணப்பங்களை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 38 காலியிடங்கள் உள்ளன.

இதற்கு விண்ணப்பதாரர்கள் iocl.com -ல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 30, மாலை 5 மணி. விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு, ஆன்லைன் அப்ளிகேஷன் பிரிண்ட் அவுட்டில் கையொப்பமிட்டு, செக்லிஸ்ட் ஏ-வில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து சப்போர்ட்டிங் ஆவணங்களுன், கையொப்பமிட்ட புகைப்படம் ஆகியவற்றை, டெபுட்டி ஜெனரல் மேனஜர், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஜவஹர் நகர், வதோரா மாவட்டம் – 391 320, குஜராத் என்ற முகவரிக்கு, 09.11.19-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

Image result for indian students

முக்கிய தேதிகள்

ஆன்லைன் விண்ணப்பம் – அக்டோபர் – 10

விண்ணப்பிக்க கடைசி தேதி- அக்டோபர் – 30

ஆன்லைன் பிரிண்ட் அவுட் கிடைக்க வேண்டிய தேதி – நவம்பர் 9

வதோதராவில் நடக்கும் எழுத்துத் தேர்வின் தற்காலிக தேதி – நவம்பர் 10

முடிவு அறிவிப்பின் தற்காலிக தேதி – நவம்பர் 15

Image result for indian graduates

கல்வி தகுதி

3 ஆண்டுகள் வேதியியல் / சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் டிப்ளோமா அல்லது பி.எஸ்சி. (கணிதம், இயற்பியல், வேதியியல் அல்லது தொழில்துறை வேதியியல்) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் / பல்கலைக்கழகத்தில், குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொது, ஓபிசி மற்றும் ஈ.டபிள்யூ.எஸ் விண்ணப்பதாரர்களுக்கு 50% மதிப்பெண்ணும், எஸ்சி / எஸ்டி இட ஒதுக்கீட்டு விண்ணப்பதாரர்கள் 45%. மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும்.

Image result for indian oil corporation

அனுபவம் 

பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் / பெட்ரோ கெமிக்கல்ஸ் / உரங்கள் / கன வேதியியல் / எரிவாயு பதப்படுத்தும் தொழில், பம்ப் ஹவுஸ், ஃபயர் ஹீட்டர், கம்ப்ரசர், வடிகட்டுதல் நெடுவரிசை, உலை, வெப்பப் பரிமாற்றி போன்றவற்றில் குறைந்தபட்சம் ஒரு வருடம் அனுபவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு

30.09.2019 தேதியின்படி பொது விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *