தொப்பையை பார்த்து பயமா ? இனி பயம் வோண்டம் உங்களுக்கு. இதோ இருக்கு வழி !

Image result for belly

அழகாய் இருக்கிறாய் தொப்பை பயமாய் இருக்கிறது என்று யாராவதுசொல்லிவிடுவார்களோ என்று கவலை கொள்ளும் டீன் ஏஜ் பெண்கள் ஒருபுறம். பெண்கள் முன்னிலையில் தொந்தியும் தொப்பையுமாய் நன்றாகவா இருக்கிறது என்று கவலைகொள்ளும் ஆண்கள் ஒருபுறம். எவ்வளவு ஸ்லிம்மாக இருந்தேன். திருமணத்துக்குப் பிறகுதான் இப்படி பெருத்து விட்டேன் என்று கவலைப் படும் பெண்கள் ஒருபுறம். ஓடி ஓடி வேலை செய்தாலும் உடம்பு குறையாமல் எடை அதிகமாகிவிட்டதே என்று சலித்துகொள்ளும் நடுத்தரவயது பெண்களும், ஆண்களும் அதிகமாகி வருகிறார்கள். என்ன செய்தால் தொப்பையை இல்லாமல் செய்யலாம் என்பதை பார்க்கலாம். பொதுவாக தலை முதல் பாதம் வரை எல்லாமே குண்டு குண்டாய் பருத்திருப்பதுதான் உடல் பருமன் என்ற எண்ணம் இருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள். உடலில் வயிறு, இடுப்பு, பிட்டம் போன்ற பகுதிகள் மட்டு பெருத்து உடலின் தோற்றம் பார்க்க மெல்லியதாக இருந்தாலும் அதுவும் உடல் பருமனுக்கான அறிகுறியே என்று சொல்லலாம்.
Image result for belly
உடலை கனக்கச்சிதமாக வைத்திருக்கும் பெண்களுக்கு கூட  தொப்பை விழுவதைத் தடுக்க முடிய வில்லை என்ற கவலை இருக்கும். முன்பெல்லாம் பெண்கள் துணி துவைக்கும் போது குனிந்து நிமிர்ந்து துணி அலசினார்கள். வீட்டைப் பெருக்கி துடைத்தார்கள். இப்போது எல்லாமே நின்றபடி செய்வதால் வயிறு இயல் பாகவே பெருத்து விடுகிறது என்பதையும் ஒப்புகொள்ள வேண்டும்.சரி என்ன செய்தால் தொப்பை இல்லாத அழகிய வயிறை பெறலாம். கடுமையான உடற்பயிற்சி செய்தால் தொப்பை குறையாது. கடுமையான டயட்டைப் பின் தொடர்ந்தால் அப்போதும் குறையாது. இரண்டையும் ஒன்றாக செய்யும் போது நிச்சயம் தொப்பை குறையும்.

தொப்பை என்றால் என்ன
தொப்பைக்கான காரணத்தை இந்தக் கட்டுரையில் நாம் முழுமையாக ஆராய தேவையில்லை. அதனால் மேலோட்டமாகவே பார்க்கலாம். ஆனால் உடலில் எலும்பு பகுதியே இல்லாத உறுப்பு வயிறு. இந்த உறுப்பில் தான் முக்கியமான உறுப்புகளைக் காக்கும் பொறுப்பும் இருக்கிறது வயிற்றின் உள்ளிருக்கும் உறுப்புகளை உறுதியோடு காத்து உடலோடு ஒட்டியிருந்தால் தான்அது வயிறு. அதுவே விரிந்து அளவுக்கு அதிகமாகும் போது தொப்பை என்று அழைக்கப்படுகிறது. சிலருக்கு தொப்பை யானது வயிற்றுப்பகுதியைத் தாண்டி முதுகு வரையில் பரவி இடுப்பு பகுதியே தெரியாமலும் இருக்கும். இந்த தொப்பையை குறைக்க கொஞ்சம் பிரயத்தனப்பட்டால் போதும். விரைவிலேயே குறைத்துவிடலாம். குறிப்பாக அழகாய் கச்சிதமாய் இருக்க விரும்பும் டீன் ஏஜ் பெண்கள்.

பானங்களில் கவனம் செலுத்துங்கள்
பானங்கள் என்றதும் செயற்கை பானங்கள் என்று நினைத்துவிடாதீர்கள். கெட்ட கொழுப்புகளை எரிக்கும் ஊட்டசத்துமிக்க பானங்கள் நம்மில் கொட்டிக்கிடக்கிறது. அவற்றை வேளைக்கு ஒன்றாகவோ தினம் ஒன் றாகவோ எடுத்துகொள்ளுங்கள்.

வெள்ளரிக்காய்
நீர்ச்சத்து அதிகம் இருக்கும் இந்த வெள்ளரிக்காயில் கலோரிகள் மிக குறைவு. நார்ச்சத்துகள் அதிகம் இருக் கும் வெள்ளரிக்காய் வயிற்றில் சேரும் கொழுப்புகளைக் கரைத்து உடலின் அல்கலைன் அளவையும் சீராக பராமரிக்கும்.

புதினா, இஞ்சி
இவை இரண்டுமே உடலுக்கு புத்துணர்ச்சி தருவதோடு பசியைக் கட்டுப்படுத்துவதில் சிறப்புமிக்க குணங்க ளைக் கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் போத அதிகமாக சாப்பிடுவபவர்கள் கூட அளவான உணவை எடுத்துகொள்வார்கள். கூடுமானவரை இவற்றை உணவில் சேர்க்காமல் தனியாக பானமாக தயாரித்து அருந்துவது நல்லது.

எலுமிச்சை
எல்லா வகையிலும் உடலுக்கு பயன் தரும் எலுமிச்சையை ஏதாவது ஒருவகையில் பழச்சாறாகவோ, உணவுப் பொருளில் சாறு பிழிந்தோ அவ்வபோது உடலுக்கு எடுத்துகொள்வது நல்லது. ஆனால் அதிகப்படியான தொப்பைக்கு எலுமிச்சை சாறை தினமும் அப்படியே எடுத்துகொள்வது நன்மை தரும்.

எலுமிச்சையில் இருக்கும் பெக்டின் என்னும் நார்ச்சத்து அதிகரிக்கும் பசியைக் கட்டுபடுத்துகிறது. உடலில் சேரும் நச்சுகளை வெளியேற்றுவதோடு தேவையில்லாத கொழுப்புகளையும் கரைத்து வெளியேற்றும்.

மேற்கண்ட வெள்ளரிக்காய், புதினா, இஞ்சி, எலுமிச்சை நான்கையும் தவறாமல் எடுத்து வந்தால் நிச்சயம் நாளடைவில் தொப்பை குறையும். ஒவ்வொன்றையும் தனித்தனியாக எடுத்துகொள்வதை விட சேர்த்து எடுத்துகொள்ளலாம.

அதிகாலையில் சிறிய வெள்ளரிக்காயை நறுக்கி ஒரு சொம்பு நீரில் சேர்த்து அதனுடன் எலுமிச்சை சாறு, புதினா இலை ஒரு கைப்பிடி, இஞ்சித்துருவல் மூன்று டீஸ்பூன் கலந்து மூன்று மணி நேரம் ஊறவைத்து தண்ணீர் குடித்தால் 15 நாட்களின் பலன் தெரிய.

இதைத் தொடர்ந்து மூன்று நாட்கள் இடைவெளியில் மூன்று மாதங்கள் வரை குடித்து வந்தால் நிச்சயம் தொப்பை காணாமல் தட்டை வயிறைப் பெறலாம். பகல் நேரங்களில் மோருடன் புதினா, இஞ்சி, வெள்ள ரிக்காய் அரைத்து சேர்த்து குடிக்கலாம.

வெள்ளரிக்காய், புதினாஇலைகளை மைய அரைத்து அதனுடன் இஞ்சிச்சாறு, எலுமிச்சைச்சாறு சேர்த்து குடிக்கலாம். இஞ்சியின் காரத்தை புதினாவின் மணமும் எலுமிச்சையின் புளிப்பும் குறைத்துவிடும். இந்த பானங்களை தொப்பக் குறைய மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்துக்கும் எடுத்துக்கொள்ளலாம் என்பது குறிப் பிடத்தக்கது.

தொப்பையை நினைத்து சாப்பிடுங்கள்
உணவை சாப்பிடும் போது இவை தொப்பையைக் குறைக்கும் என்ற எண்ணத்தோடு சாப்பிடுங்கள். அரிசி உணவைக் குறைத்து பச்சை காய்கறிகள் கலந்த சாலட் அதிகம் எடுத்து வந்தால் தொப்பை மட்டுமல்ல உடல் எடையும் குறையும். நீர்ச்சத்து மிக்க காய்கறிகள் சாலட்டில் அதிகம் இடம் பெறும்படி பார்த்துகொள்ளுங்கள். முட்டைகோஸ் தொப்பை அதிகரிக்காமல் தடுக்கும் என்பதால் அவற்றைத் தொடர்ந்து எடுத்துகொள்ளலாம் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். பானங்களில் இனிப்பு தேவையென்றால் தேன் கலந்து குடியுங்கள்
பூண்டு (பச்சையாக சாப்பிட முடிந்தால் பலன் பன்மடங்கு), ஓட்ஸ், தக்காளி, காளான், பாதாம் போன்றவை யும் தொப்பையைக் குறைக்கும்.

தொப்பைக்கு உதவும் உணவுகள்
பிடித்த உணவு, பிடித்த ருசி என்று கண்டதையும் நொறுக்கி தள்ளுவதை விடுங்கள். அதிக இனிப்பு அதிக உப்பு, எண்ணெய் பலகாரம், வறுத்து பொறித்த உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள், நொறுக்குத் தீனி கள், சாட் வகைகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சிப்ஸ்கள்…இவையெல்லாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மூளைக்கு தெரிகிறது ஆனால் நாக்குக்கு சுவை அடிமையாகிவிட்டதே என்று நினைத்தால் தொப்பைக் கொஞ்சம் கூடுவது போல் கற்பனை செய்து பாருங்கள் பின்பு அதை வாழ்நாளில் எப்போதுமே தொட மாட்டீர்கள். இவற்றையெல்லாம் தவிர்த்தாலும் நீங்கள் வலு குறைந்த நோஞ்சான் ஆகிவிடமாட்டீர்கள். மாறாக அழகாக ஃபிட்டான ஆரோக்கியமான தட்டை வயிறையே பெறுவீர்கள்.

உடற்பயிற்சி
நீங்க சொன்னதெல்லாம் சாப்பிடறேன் ஆனாலும் எனக்கு தொப்பை குறையலியே என்று கவலைப்பட்டால் எப்படி தொப்பை குறையும். இரு கை தட்டினால் தான் ஓசை என்பது போல் உணவோடு உடற்பயிற்சியும் சேர்த்து செய்யும் போது தான் தொப்பை குறைய தொடங்கும்.

கடுமையான உடற்பயிற்சி செய்தால் தான் தொப்பை குறையும் என்று பயப்பட வேண்டாம். கொழுப்பை குறைக்கும் உணவுகளில் கவனம் செலுத்துவதோடு எளிமையான உடற்பயிற்சிகளை 10 நிமிடங்களாவது செய்யுங்கள்.காலையில் எழுந்ததும் 10 தோப்புக்கரணங்களைப் போடுங்கள் பொருள்களை கீழே போட்டு குனிந்து நிமிர்ந்து எடுப்பது போன்று 40 முறை செய்யுங்கள். எப்போதும் நாற் காலியில் அமராமல் தரையில் சம்மணமிட்டு அமருங்கள். இன்னும் சில எளியபயிற்சிகளை உடன் சேர்த்து செய்யு. பத்துநிமிடங்களாவது நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். படுக்கும் போது குப்புற கவிழ்ந்து வயிற்றை அழுத்தியப்படி ஒரு மணி நேரம் படுக்கலாம். ஆனால் இதை மருத்துவர்களும் உடற்பயிற்சி நிபு ணர்களும் ஊக்குவிப்பதில்லை என்பதால் அவர்களது ஆலோசனையைக் கேட்டு நடப்பது நல்லது.

உடற்பயிற்சியோடு உணவு முறைகளையும் திட்டமிட்டு உரிய நேரத்தில் எடுத்துகொண்டு வந்தால் பானை போன்ற தொப்பை பக்குவமாய் குறைந்து கச்சிதமான வயிற்றைக் கொடுக்கும். பிறகு ஃபிட்டான வயிற் றுக்கு உங்களுக்கு நீங்களே நூற்றுக்கு நூறு மதிப்பெண் கொடுத்துகொள்ளலாம்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *