OYO விடுதியில் நடந்த சம்பவம்.. அதிர்ச்சியடைந்த ஜோடி.. பின்பு ஓட்டல் நிற்வாகம் செய்த காரியம்.?

ஓயோ தங்கும் விடுதி க்கான பட முடிவு

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில், ஓட்டல் அறையில் தங்க வந்த ஹிந்து – முஸ்லிம் ஜோடியினருக்கு, மதத்தை காரணம் காட்டி, ஓட்டல் நிர்வாகம் அறை தர மறுத்தது சர்சையை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தானில், உள்ள உதய்ப்பூரை சேர்ந்த, 31 வயதான உதவி பேராசிரியர், தன் தோழியுடன் ஜெய்ப்பூர் வந்தார். அங்கு, ஓட்டல் முன்பதிவுகளை நிர்வகிக்கும் நிறுவனமான, ‘ஒயோ’ கட்டுப்பாட்டில் செயல்படும், ‘சில்வர் கீ’ எனும் ஓட்டலில், அறை முன் பதிவு செய்திருந்தார். அறையில் தங்குவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது, அவர் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர் என்றும், தனது தோழி, ஹிந்து மதத்தை சேர்ந்தவர் என்றும் குறிப்பிட்டார்.

ஓயோ தங்கும் விடுதி க்கான பட முடிவு

இதையடுத்து, அவர்களுக்கு அறை தர, ஓட்டல் நிர்வாகம் மறுத்தது. காரணம் கேட்டபோது, ‘வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் ஒன்றாக அறையில் தங்க, அனுமதிக்க கூடாது’ என, உள்ளூர் போலீசார் உத்தரவிட்டுள்ளதாக, ஓட்டல் மேலாளர் தெரிவித்தார். இதை எழுத்துப்பூர்வமாக அளிக்குமாறு, அந்த ஜோடியினர் வலியுறுத்தினர். ஆனால், ஓட்டல் நிர்வாகம் மறுத்துவிட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக, விசாரணை நடத்தப்படும் என, ஒயோ நிர்வாகம் தெரிவித்து உள்ளது. ஓட்டலில் தங்க வந்த விருந்தினர்களிடம், மன்னிப்பும் கோரி உள்ளது.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *