நெல்லை மாநகர காவல்துறை எடுத்த அற்புதமான முடிவு.. வாழ்த்துக்கள் பலாயிரம்.!

துணை ஆணையர் சரவணன் க்கான பட முடிவு

நெல்லை மாநகர காவல்துறையில் முதன் முறையாக திருநங்கையர்களை ஊர்காவல் படையில் பணியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

நெல்லையில் சமூக சேவை சங்கம் மற்றும் பேஸ் டிரஸ்ட் ஆகிய அமைப்புகளின் சார்பில் திருநங்கையர்களின் வாழ்வும், வளர்ச்சியும் என்ற கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்புடைய படம்

இந்த நிகழ்ச்சியில், திருநங்கையர்களின் கோரிக்கைகள் மற்றும் தங்களுக்கு ஏற்படும் இடையூறுகள் குறித்து நெல்லை காவல்துறை துணை ஆணையர் சரவணனுடன் கலந்துரையாடினர்.

இதனை தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காவல்துறை துணை ஆணையர் சரவணன் நெல்லையில் முதல் முறையாக ஊர்காவல் படையில் திருநங்கையர்கள் பணியமர்த்தப்பட உள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றார்.

துணை ஆணையர் சரவணன் க்கான பட முடிவு

திருநங்கையர்களின் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு ஊர்காவல் படையில் பணி அமர்த்தபடுவார்கள் என காவல்துறை துணை ஆணையர் சரவணன் தெரிவித்தார்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *