பிகில் பாடல் விழா சொதப்பல்கள் – ரசிகர்கள் சாபம்???

Related image

சென்னை அருகிலுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் விஜய் நடித்த பிகில் படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா செப்டம்பர் 19 மாலை நடந்தது.

விழாவுக்குச் செல்லும் வழியெங்கும் கூட்டம் நிரம்பிவழிந்தது. மிகப்பெரிய வளாகம் என்றபோதும் சிறிது நேரத்தில் மகிழுந்து நிறுத்துமிடம் நிரம்பிவிட்டதெனச் சொல்லி வெளிக்கதவைப் பூட்டிவிட்டனர்.

Image result for bigil movie audio launch

இதனால், படத்தில் பணியாற்றியவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் ஆகியோர் வந்த மகிழுந்துகள் சாலையிலேயே நின்று கொண்டிருந்தன.அதற்குள் உட்காந்துகொண்டு உள்ளே இருப்பவர்களை கைபேசியில் அழைத்துக் கொண்டிருந்தனர்.

படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்தின் வண்டியையே உள்ளேவிடாமல் தடுத்ததுதான் உச்சம்.

Image result for bigil movie audio launch

கிரீன்பாஸ் எனும் முதல்தர நுழைவு அனுமதி வைத்திருந்த நூற்றுக்கணக்கானோர் உள்ளே போக முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள்.

பிகில் படத்தின் படத்தொகுப்பாளர் ரூபன் ஒரு கிலோமீட்டர் நடநது போய்க்கொண்டிருந்தார்.

Image result for bigil movie audio launch

நீண்ட தூரப்பயணம், கடும் முயற்சி மற்றும் பொருட்செலவில் வாங்கிய நுழைவுச்சீட்டு கையில் இருந்தும் விழா அரங்குக்குள் நுழையமுடியாத கோபத்தில் நூற்றுக்கணக்கானோர் ஏற்பாட்டாளர்களுக்குச் சாபம் விட்டுக் கொண்டிருந்தனர்.

Image result for bigil movie audio launch

விழா நிகழ்ச்சிகள் சன் தொலைக்காட்சியில் பிரத்யேகமாக ஒளிபரப்பப் பட விருக்கிறது. இதனால், ஆர்வம் காரணமாக சில ரசிகர்கள் தெளிவற்ற முறையில் எடுத்து வெளியிட்ட அரைநிமிட கால் நிமிட காணொலிகளையும் சமூக வலைதளங்களிலிருந்து நீக்கியிருக்கிறார்கள்.

Related image

இந்த விசயத்தில் இவ்வளவு தெளிவாக இருப்பவர்கள் விழாவுக்கு வந்தவர்களைத் தெருவில் விட்டிருக்கிறார்கள்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *