ஹெல்மெட், சீட்பெல்ட் அபராதம்.., 50% குறைப்பு..முதல்வர் அதிரடி.!

 

Related image

ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாதது உள்ளிட்ட புதிய மோட்டார் வாகன விதிமுறை மீறல்களுக்கான அபராதத்தொகையை 50 சதவீதத அளவுக்கு குறைத்து குஜராத் மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த, 1ம் தேதி(செப்.,1) முதல், மோட்டார் வாகன திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி வாகனவிதிளை மீறுபவர்களுக்கு அதிகளவு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இதற்கான அரசாணை இன்னும் பிறப்பிக்கப்படவில்லை. இந்நிலையில் குஜராத்தில் வாகன விதிமீறல்களுக்கான அபராத்தொகையை குறைத்து அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Related image

முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பு, குஜராத்தில், ஹெல்மெட் இல்லாமல் பயணிப்பவர்களுக்கான அபராதத் தொகையை ரூ.1000லிருந்து ரூ.500 ஆக குறைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. சீட் பெல்ட் அணியாதவர்களுக்கு அபராதம் ரூ.1,000லிருந்து ரூ.500 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் ரூ.5000லிருந்து குறைக்கப்பட்டுள்ளது. லைசென்ஸ் இல்லாமல் பைக் ஓட்டுபவர்களுக்கான அபராதம் ரூ.2000, நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் ரூ.3000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆபத்தான முறையில் வாகனங்கள் ஓட்டுவதற்கான அபராதத்தொகை ரூ.5000லிருந்து குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.1500, இலகு ரக வாகனங்களுக்கு ரூ.3,000 மற்றும் பிற வாகனங்களுக்கு ரூ.5000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *