திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 20,000 ரூபாயா.? அதிர்ச்சியில் பக்தர்கள்.! இதற்கு காரணம்.?

Related imageஉலகின் பணக்கார கடவுளாக கருதப்பட்டு வரும் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அளவு உயர்ந்திருக்கிறது. கூட்டத்தின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு மாநிலத்தின் முக்கியமான

நகரங்களில் ஏழுமலையானை கோவிலைக் கட்ட திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது. அதனை தேவஸ்தானம் கட்டவும் முடிவெடுத்தது. அண்மையில், தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக ஏழுமலையான் கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் பலர் தரிசித்து வருகின்றனர்.

தமிழகத்தின் தென்பகுதிக்கு கன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ளதால், வடக்குப் பகுதியில் உள்ளவர்களுக்கு அடுத்ததாக சென்னையில் ஏழுமலையான் கோவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.Image result for திருப்பதி ஏழுமலையான்

இதற்காக கோடிக்கணக்கில் செலவாகும் என்பதால் அதற்கு நிதி திரட்ட தேவஸ்தானம் “ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆலய நிர்மான டிரஸ்ட்” என்ற கமிட்டியை உருவாக்கியுள்ளது.

கமிட்டி மூலம் எடுக்கப்பட்ட முடிவின்படி, விஐபிகளுக்கு தரிசன வரிசையை உருவாக்கப்பட இருக்கிறது. விஐபி வரிசையில் தரிசனம் செய்ய விரும்புபவர்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.

மேலும் இந்த வரிசையில் தரிசனம் செய்பவர்கள் குலசேகர ஆழ்வார்படி வரை சென்று தரிசனம் செய்யலாம். சாதாரண வரிசையில் நின்று வருபவர்கள் தொலைவிலிருந்தே தரிசனம் செய்ய வேண்டியிருக்கும்.

ஆனால் விஐபி வரிசையில் தரிசனம் செய்தால் ஏழுமலையானுக்கு அருகிலேயே சென்று தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.Related image

மேலும் இதன் மூலம் வரும் பணத்தை பல்வேறு பகுதிகளில் ஏழுமலையான் கோவில் கட்ட பயன்படுத்த இருப்பதாக தேவஸ்தானம் முடிவு செய்திருக்கிறது. இந்த விஐபி வரிசையில், நாளொன்றுக்கு 200 முதல் 300 வரையிலான நபர்களை அனுமதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *