அண்ணாச்சிபழம் சாப்பிடலாமா ? ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

Image result for pineapple

ஒரு சில பழங்களையே எந்த வேளையிலும் சாப்பிட முடியும். அதில் நிறைய வைட்டமின் சத்துக்கள் நிரம்பியும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட அருமையான ஒரு பழம் அன்னாசிப்பழம். பார்க்க கரடுமுரடாக இருக்கலாம். தோல் சீவி இதனை நறுக்குவதும் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் அதன்பின் கிடைக்கும் பழம் சுவையானது மட்டுமல்ல, அளவில்லாத நற்குணங்களைக் கொண்டது.

பல்வேறு பூக்களின் மகரந்தங்கள் இணைந்து உருவாகும் பழம்தான் அன்னாசிப்பழம். அதனால்தானோ என்னவோ இப்பழத்திற்குப் பலவித உடல்நலக் குறைவுகளைச் சரி செய்யும் தன்மை உள்ளது.

இதனை அளவாக சாப்பிட்டால் பயன்கொடுக்க கூடியதாகவும், அளவு மீறினால் பலவித பக்க விளைவுகளை ஏற்படுத்த கூடியதாகவும் இருக்கிறது.இரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கும்

Image result for pineapple

இரத்த சர்க்கரையை ஊக்குவிக்கும் அன்னாசிப்பழத்தில் இயற்கையான சர்க்கரை அடங்கியுள்ளது.
ஆனால் அது அதிகளவில் உள்ளது தான் பிரச்சனையாக இருக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அதன் தாக்கம் நல்லதல்ல. இது இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை அதிகரித்துவிடும்.

பழுக்காத அன்னாசி பழத்தை சாப்பிட்டாலோ அல்லது ஜூஸ் போட்டு குடித்தாலோ அது ஆபத்தை ஏற்படுத்தலாம். இது நச்சுத்தன்மையை ஏற்படுத்தி விடும், கடுமையான வாந்தியையும் உண்டாக்கும்.

அன்னாசி பழத்தில் பொட்டாசியம், கால்சியம் மாங்கனீஸ் மற்றும் மினரல் போன்ற உடலுக்கு ஆரோக்கியமான முக்கிய சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.

Image result for pineapple

அன்னாசி பழத்தில் உள்ள மினரல் சத்துக்கள் நம் உடலில் ஏற்படும் வளர்ச்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இதயம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கிறது.

அன்னாசியில் கொழுப்புச் சத்துகள் குறைவாகவும், நார்ச்சத்துகள் அதிகமாகவும் இருப்பதால், இவை பித்தக் கோளாறுகள், ஜீரணக் கோளாறுகள் உடலில் ஏற்படும் வீக்கம், தொப்பை குறைத்தல் போன்ற பிரச்சனைகளை அன்னாசி பழமானது தீர்த்து வைக்கிறது.

Image result for pineapple

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *