உச்சி முதல் பாதம் வரை ஆரோக்கியமான அழகுக்கு இந்த ஒரு கற்றாழை போதும் !

Related image

கற்றாழை மருந்துப் பொருளாகவும், அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுகிறது. பச்சை நிறத்தில் காணப்படும் கற்றாழை முட்களுடன் காணப்படும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி, முகம் பளிச்சிடவும் கற்றாழையில் உள்ள ஜெல் போன்ற திரவம் பயன்படுகிறது.

கற்றாழையின் இலையிலிருந்து எடுக்கப்படும் ஜெல் சருமத்திற்கு பாதுகாப்பதாக கருதப்படுகிறது. சூரிய ஒளியுடன் கலந்து வரும் கடும் வெப்பத்தை ஏற்படுத்தும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் தீய விளைவுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கின்றது. மேலும் சருமத்தின் ஈரத்தன்மையை காத்து சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்துகிறது.

Image result for கற்றாழை

இது ஒரு கசப்பு தன்மையைக் கொண்டதால் கூடுதல் பலன் அளிக்கும் இயற்கை மருந்துப் பொருளாக உள்ளது. இந்தக் கற்றாழையின் மூலம் பல நோய்கள் குணமடைகின்றன. கற்றாழையை நன்றாகத் தோல் சீவி, ஆறேழு முறை நீரில் நன்றாகக் கழுவிக்கொள்ளவும். அதனுடன் தேன் அல்லது பனைவெல்லம் சேர்த்து, மிக்ஸியில் அரைத்து ஜூஸாக சாப்பிட்டால், மாதவிடாய் வயிற்றுவலி குறையும்.

வெள்ளரிக்காயை அரைத்து, அத்துடன் ஓட்ஸ் பொடி மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் ஸ்கரப் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.இப்படி செய்து வர, முகத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக வெளியேறி, முகம் பிரகாசமாக இருக்கும்.

Image result for கற்றாழை

கற்றாழை ஜெல் முகத்தில் உள்ள கருவளையங்களை மறைய செய்ய ரொம்பவே பயன்படுகிறது.
எனவே கற்றாழை ஜெல்லை கண்களில் உள்ள கருவளையங்களின் மீது அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.இவ்வாறு செய்வதினால் முகத்தில் உள்ள கருவளையங்கள் மறையும் இருப்பினும் இந்த முறையை தொடர்ந்து 10 நாட்கள் வரை செய்து வர வேண்டும்.

ல பேருக்கு இருக்கின்ற ஒரு பிரச்சனை, பாதவெடிப்பு பிரச்சனை என்று சொல்லலாம். இந்த பாத வெடிப்பு மறைய கற்றாழை ஜெல்லினை பாத வெடிப்பு உள்ள இடத்தில் நன்றாக தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.இவ்வாறு இந்த முறையை தொடர்ந்து செய்து வர பாத வெடிப்பு பிரச்சனை உடனே சரியாகும்

Image result for கற்றாழை

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *