தமிழகத்திற்கு இனி இந்த பிரச்சனை இருக்காது..மத்திய அமைச்சர் அளித்த வாக்குறுதியால் மக்கள் மகிழ்ச்சி.!

Image

மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கி வரும் மண்ணெண்ணெய் அளவை 24 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இதனால் ரேசனில் மண்எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

தமிழ்நாட்டுக்கு வழங்கி வரும் மண்ணெண்ணெய் அளவை குறைக்கக்கூடாது என்று பல்வேறு அமைப்பினரும் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

மண்எண்ணெய்

இந்தநிலையில் ‘ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு’ திட்டம் பற்றி விவாதிக்க இன்று டெல்லி விக்யான் பவனில் உணவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றிருந்த உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசினார்.

Image

அப்போது தமிழகத்துக்கு வழங்கி வரும் மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை குறைக்கக்கூடாது என்று வலியுறுத்தினார். இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தையும் மத்திய மந்திரியிடம் வழங்கினார்.

இதை படித்து பார்த்த அவர் தமிழகத்துக்கு தட்டுபாடின்றி மண்ணெண்ணெய் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தார்.

தனது டுவிட்டர் பக்கத்திலும், தட்டுப்பாடின்றி தமிழகத்துக்கு மண்ணெண்ணெய் வழங்கப்படும் என்று பதிவிட்டுள்ளார்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *