யார்.? யார்.? வெட்டியதும்., வெட்டப்பட்டது., அதிர்ச்சியில் பொதுமக்கள்.! குழப்பத்தில் போலீஸார்.,

Image result for cartoonதமிழகத்தில் ஆங்காங்கே பல கொலை மற்றும் திருட்டு சம்பவங்கள் அடுத்தடுத்த நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை நகரில் கிரிவலப்பாதையில் பொதுப்பணித்துறை அலுவலகம் உள்ளது.

இந்த அலுவலகத்தின் நுழைவாயிலில் நின்றிருந்த ஒருவரை ஒரு கும்பல் அருவா மற்றும் கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளது. இதனைப்பார்த்து அங்கிருந்த கடைக்காரர்களும், அந்த வழியாக சென்ற பொதுமக்களும் பார்த்து அதிர்ச்சியாகியுள்ளனர்.

வெட்டி கொலை செய்யப்பட்டவரின் உடல், ரத்த வெள்ளத்தில் கிடந்ததை ஒரு கும்பல் காரில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. இதுதொடர்பாக இதுவரை யாரும் புகார் செய்யவில்லை எனக்கூறப்படுகிறது.ப்

இந்த தகவல் தெரிந்த திருவண்ணாமலை நகர காவல்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது. வெட்டப்பட்டது யார், வெட்டியது எந்த கும்பல், எதற்காக வெட்டியது என சம்பவயிடத்துக்கு வந்த காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம் திருவண்ணாமலை நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.Image result for விசாரணை

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *