பி.வி.சிந்துக்குலாம் முன்னாடி இவங்கதான்..நான்கு நாட்கள் கழித்து ட்விட்டரில் டிரெண்டான மான்சி ஜோஷி.!#ManasiJoshi

mansi joshi க்கான பட முடிவு

பாரா பாட்மிண்டன் சாம்பியன் ஷிப் 2019 மகளிர் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் மானசி ஜோஷி சாம்பியன் பட்டத்தை கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வென்றார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஒரு விபத்தில் தனது இடதுகாலை இழந்தவர் மானசி ஜோஷி. இவர் ஜெர்மன் டென்னிஸ் வீராங்கனை ஸ்டெஃபி கிராஃப் விளையாட்டால் ஈர்க்கப்பட்டு இந்த விளையாட்டில் ஆர்வம் செலுத்தி வந்தார்.

இவர் கடந்த 2015 முதல் பாரா பாட்மிண்டன் போட்டிகளில் கலந்துக் கொண்டு வருகிறார். அன்மையில் நடைபெற்ற பாரா பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிச் சுற்று வரை சென்ற இவர்,கடந்த சனிக்கிழமை நடந்த மகளிர் ஒற்றையர் போட்டி இறுதிச் சுற்றில், மூன்று முறை சாம்பியன் பட்டம் பெற்ற பருல் பார்மருடன் மோதினார்.

mansi joshi badminton க்கான பட முடிவு

இறுதிச் சுற்று போட்டியில் முதலில் சாதாரணமான ஆட்டத்தை வெளிபடுத்திய  மானசி ஜோஷி, படிப்படியாக விளையாட்டில் நல்ல முன்னேற்றம் காட்டினார்.

இதையடுத்து இந்த இறுதிச் சுற்றில் மானசி ஜோஷி மூன்று முறை சாம்பியனாக இருந்த பருல் பார்மரை 21 ; 12, 21 ; 7 என்னும் செட் கணக்கில் வென்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இது குறித்து பேசிய அவர், தனது வெகுநாள் கனவு இப்போது பலித்துள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

mansi joshi க்கான பட முடிவு

இந்நிலையில், இத்தனை நாட்களாக பி.வி.சிந்து வெற்றிபெற்று தங்கம் வாங்கி தந்ததை பெருமையாக பேசி வந்த இந்தியா தற்போது தான் மான்சி ஜோஷியின் பக்கம் தன் கவனத்தை திருப்பியுள்ளது. இன்று இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளார் மான்சி ஜோஷி.#ManasiJoshi

வெற்றிபெற்று சுமார் 4 – 5 நாட்கள் நிறைவடைந்துவிட்ட நிலையில் தற்போது இவர் குறித்து சமூக ஊடகங்கள் பேசுவதும், வெற்றிபெற்ற அன்றே பி.வி.சிந்து குறித்து ஊடகங்களும், அரசியல் தலைவர்களும் மிக பெரிதாக பேசுவதும் அவ்வப்போது பதக்கங்கள் வெல்லும் விளையாட்டு வீரர்களுக்கு பழகி போன ஒன்று என்பது போலவே இதையும் கடந்து சென்றுவிட்டார் மான்சி ஜோஷி.

mansi joshi badminton க்கான பட முடிவு

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *