வரம்பு இல்லாமல் அன்லிமிடெட் ஜியோ டேட்டா யூஸ் பண்ணலாம்.! ஜியோ வரம்பற்ற திட்டங்கள்.,

Related imageரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ப்ரீபெய்ட் பயனர்களுக்காக ரூ.98, ரூ.999, ரூ.1,999, ரூ.4,999 மற்றும் ரூ.9,999 என்ற ஐந்து ப்ரீபெய்ட் திட்டங்களைக் தனது பட்டியலில் கொண்டுள்ளது, இந்த திட்டங்களில் சுமார் 750 ஜிபி வரை வரம்பற்ற டேட்டா மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான சிறப்பு அணுகலையும் ஜியோ வழங்கிவருகிறது.

ஜியோ அறிமுகம் செய்துள்ள இந்த டேட்டா வரம்பு இல்லாத ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள 5 திட்டங்களில் நான்கு திட்டங்களும் நீண்ட நாள் திட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றின் விலை ரூ.999 இல் இருந்து துவங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் ஜியோவின் ரூ.98 திட்டம் அப்படியானது அல்ல.

எந்தவொரு தினசரி வரம்பும் இல்லாமல் ஜியோவின் ப்ரீபெய்ட் திட்டங்களில் மலிவான விலையில் வழங்கப்படுவது ரூ.98 திட்டமாகும். இந்த திட்டம் எந்த FUP வரம்பும் இல்லாமல் வரம்பற்ற வாய்ஸ் காலிங் அழைப்பு, 2 ஜிபி 4ஜி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.Image result for ஜியோ

இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 2ஜிபி டேட்டா முடிவடைந்தால், சந்தையில் கிடைக்கும் 4ஜி டேட்டா வவுச்சர்களான ரூ.11, ரூ.21, ரூ.51 அல்லது ரூ.101 என்ற டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் செய்து கூடுதலாக 6 ஜிபி வரை டேட்டா சேவையைப் வரம்பில்லாமல் பயன்படுத்திக்கொள்ளலாம்.

எந்தவொரு தினசரி வரம்பும் இல்லாமல் ஜியோவின் ப்ரீபெய்ட் திட்டங்களில் நீண்ட கால திட்டமான ரூ.999 திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு வரம்பற்ற வாய்ஸ் கால்லிங் சேவை, 60 ஜிபி வரை 4ஜி டேட்டா சேவை மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் என அனைத்தும் 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.Image result for ஜியோ

பட்டியலில் மூன்றாவது திட்டமாக ரூ.1,999 ப்ரீபெய்ட் திட்டம் உள்ளது, இந்த திட்டத்தின் கீழ் ஜியோ பயனர்களுக்கு எந்தவொரு தினசரி வரம்பும் இல்லாமல் 125 ஜிபி ஒட்டுமொத்த 4 ஜி டேட்டா சேவை, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் என 180 நாள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

ஜியோ நிறுவனத்தின் வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டமான ரூ.4,999 ப்ரீபெய்ட் திட்டத்தில் பயனர்களுக்கு எந்தவொரு தினசரி வரம்பும் இல்லாமல் வரம்பற்ற குரல் அழைப்பு, 350 ஜிபி டேட்டா நன்மை மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் என 360 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

பட்டியலில் இறுதியாக இருக்கும் திட்டம் ரூ.9,999 ப்ரீபெய்ட் திட்டம் தான், ஆனால் இந்த திட்டத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்று தான் கூறவேண்டும். இந்த திட்டத்தின் கீழ் ஜியோ பயனர்களுக்கு எந்தவொரு தினசரி வரம்பும் இல்லாமல் மொத்தமாக 750 ஜிபி 4ஜி டேட்டா சேவை வழங்கப்படுகிறது. இன்னும் பல சலுகைகளை வெளியிட்டு வருகின்றனர்.Image result for ஜியோ

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *