நான் செத்தப்பிறகு இங்கு தான் புதைக்க வேண்டும், அடம்பிடிக்கும் நடிகை ரேகா!!

Image result for actress rekha tamil

பாரதிராஜா இயக்கத்தில் கடலோரக் கவிதைகள் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரேகா. தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து புகழ்பெற்ற ரேகாவுக்கு புன்னகை மன்னன் மிகப்பெரிய வெற்றியையும் ரசிகர்களையும் பெற்றுக் கொடுத்தது.
Image result for actress rekha tamil
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் ரேகா, சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், தான் நடித்த ஒரே ஒரு படத்தை மட்டும் தான் தனது தந்தை பார்த்துள்ளார் என்றும் சினிமாவில் நடிப்பது தந்தைக்கு பிடிக்காது என்றும், அதற்குக் காரணம் தன் மீது அவர் வைத்திருந்த அதிக அன்பும் அக்கறையும் தான் என்றும் கூறினார்.
Image result for actress rekha tamil

மேலும் பேசிய அவர், தந்தையின் மறைவுக்குப் பின் கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அவருக்கு ஒரு கல்லறை எழுப்பியதாகவும், அந்த இடத்துக்கு அருகே யாரையும் அடக்கம் செய்ய வேண்டாம் என்றும் கேட்டிருக்கிறார்.

இறந்த பின், தந்தையை அடக்கம் செய்த இடத்துக்கு அருகில் தன்னையும் அடக்கம் செய்ய வேண்டும் என்றும் ரேகா விருப்பம் தெரிவித்துள்ளார்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *