உதவி செய்த இஸ்ரோ ….!தமிழில் வெளியாகும் மிஷன் மங்கள் …!

Mission-Mangal-releasing-in-Tamil

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் ஹோப் புரொடக்சன்ஸ் தயாரப்பில் அக்ஷய் குமார் மற்றும் வித்யா பாலன் முன்னனி பாத்திரங்களில் நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் மிஷன் மங்கள்

இந்த படத்திற்கு  அமித் திரிவேதி இசை அமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அறிமுக இயக்குனர் ஜெகன் சக்தி இயக்கி உள்ளார். இந்தியில் தயாராகி உள்ள இந்தப் படம் தமிழிலும் வெளிவருகிறது. இதுகுறித்து இயக்குனர் ஜெகன் சக்தி கூறியதாவது மேலும் பல பிரபலங்கள் இந்த படத்தில் இணைத்துள்ளனர்

என் சகோதரி சுஜாதா இஸ்ரோவில் பணிபுரிகிறார், எனவே மங்கல்யான் மிஷன் குழுவுடன் விரிவான நேர்காணல்களைச் செய்ய முடிந்தது. இந்தப் படத்திற்கு தேவையான அனைத்து உதவிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்குவதில் இஸ்ரோ மிகவும் உதவியாக இருந்தது. மறுபுறம் கலை இயக்குனர் மற்றும் வி.எப்.எக்ஸ் குழு, படத்தின் மிக முக்கியமான அங்கமாக இருந்த ராக்கெட்டை வடிவமைக்க எங்களுக்கு உதவினர்.

Image result for mission mangal

நாங்கள் இஸ்ரோவின் வளாகத்தில் படப்பிடிப்பு நடத்த ஆர்வமாக இருந்தோம், ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களால் அதை அனுமதிக்க முடியவில்லை. நடைமுறை வாழ்க்கையில் எளிமையாக வாழும் சாதாரண ஆண்களும் பெண்களும் எப்படி அசாதாரணமானவர்களாக இருக்கிறார்கள் என்பது பற்றிய கதை இது என்றார்

மேலும் மிஷன் மங்கள் என்பது செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக இந்தியாவால் அனுப்பப்பட்ட முதல் செவ்வாய் ஆர்பிட்டர் மிஷன். இது உலக அளவில் பாராட்டப்பட்ட ஒரு சாதனை. மேலும் அது, அதனுடைய முதல் முயற்சியிலேயே வெற்றியைப் பெற்றது என்பது குறிப்பித்தக்கது

Image result for mission mangal

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *