தலைவாவை தொடர்ந்து தலைவி …! மகிழ்ச்சியில் தொண்டர்கள்

Image result for jayalalitha

பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்று சினிமாவாக எடுப்பது வழக்கமான ஒன்று ஆகிவிட்டது. சினிமா நடிகர் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் வரை அனைவரின் வாழ்க்கை கதைகள் சினிமாவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறும் சினிமாவாகிறது.

மேலும் தமிழில் தற்போது பயோபிக் படங்கள்தான் டிரெண்ட். அந்தவகையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை மட்டுமே இரண்டு பேர் படமாக்கி வருகிறார்கள்.

இதில் ஒரு படத்தை  விஜய்யின் தலைவா படத்தை  இயக்கிய இயக்குநர் விஜய் இயக்குகிறார். ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் ஒப்பந்தமாகியுள்ளார் என்று கூறப்பட்ட நிலையில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார் என்று தெரிவிக்க பட்டு உள்ளது

“தலைவி” படத்தில் ஜெ-வாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை!

ஜீவா இயக்கத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக தமிழில் தாம் தூம் படத்தில் அறிமுகமான இந்தி நடிகை தான் கங்கனா ரனாவத், நீண்ட இடைவெளிக்குப் பின், மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வருகிறார், அதுவும் மிகமுக்கியமான கதாபாத்திரத்தில்.மேலும் இந்தப் படத்தில் நடிப்பதற்காக கங்கனாவுக்கு 25 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அது உண்மை என்றால் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெருமை கங்கனாவுக்குச் சேரும்.

மேலும் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு மைசூரிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இப்படத்தில் எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்த்சாமி நடிக்க உள்ளார்

இந்நிலையில் கிடைத்துள்ள தகவலின்படி , வரும் அக்டோபர் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது …..இந்த படத்தை பார்க்க முன்னாள் முதல்வரின் தொண்டர்களும் கண்டிப்பாக ஆர்வமாக இருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

Image result for thalaivi

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *