பெண்களே கவலை வேண்டாம் …அவற்றை இனி எளிதாக நீக்கலாம் …!

Image result for hair in upper lips

பெண்கள் சிலருக்கு உதடுகளுக்கு மேல்புறமும், தாடைக்கு கீழ்புறமும் மீசை வளர்வதைப் பார்த்திருப்போம். ஆண்களின் உடலில் முடி வளர்வதைத் தூண்டும் ஹார்மோன்கள் பெண்களின் உடலில் சுரக்கும்போது முகத்தில் தேவையற்ற முடி வளர்கிறது. இந்த பிரச்னையால் பெண்கள் வெளியில் செல்லவே கூச்சப்படுவார்கள்.

முடி வளர்வதைத் தடுக்க பார்லர்களில் செய்யப்படும் த்ரெட்னிங் மேற்கொள்வதால் ஒற்றைத் தலைவலி ஏற்படுவதுடன் பக்க விளைவுகளும் ஏற்படும்.

மேலும் பொதுவாக முடியை பிடுங்கினால் அவ்விடத்தில் முடி அதிக அளவில் வளர ஆரம்பிக்கும். எனவே உதட்டிற்கு மேல் வளரும் முடியை பிடுங்காமல், வீட்டில் இருக்கும் ஒருசில இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி, உதட்டிற்கு மேல் மாஸ்க் போட்டு வந்தால், அவ்விடத்தில் முடியின் வளர்ச்சி தடைப்பட்டுவிடும்.

Image result for கடலை மாவு and thayir

தயிரில் கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, உதட்டிற்கு மேல் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் கையில் தண்ணீரை நனைத்து உதட்டின் மேல் சிறிது நேரம் தேய்த்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி அன்றாடம் செய்து வந்தால் உதட்டின் மேல் வளரும் முடியை நீக்குவதோடு, அதன் வளர்ச்சியையும் தடுக்கலாம்.

Image result for எலுமிச்சை சர்க்கரை

எலுமிச்சை சாற்றில் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வாணலியில் சேர்த்து 1 நிமிடம் கிளறி, பின் அதனை இறக்கி குளிர வைத்து, காட்டன் பயன்படுத்தி உதட்டின் மேல் தடவி வட்ட வடிவில் தேய்க்க வேண்டும். இதனாலும் முடியை நீக்கலாம்.

Image result for மஞ்சள் தூள் பால்

மஞ்சள் தூளை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அந்த கலவையை உதட்டிற்கு மேல் பகுதியில் தடவி உலர வைத்து, பின் அதனை மேலும் கீழுமாக தேய்த்து கழுவ வேண்டும் இதனாலும் முடியை நீக்கலாம்..

Image result for கஸ்தூரி மஞ்சள் பால்

சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் தூளுடன், தேவையான அளவு பால் சேர்த்து நன்றாக குழைத்து ரோமங்களின் மீது பூசவும். இந்த கலவையை சுமார் ஒரு 10 நிமிடங்களுக்கு முகத்தில் தேய்த்து, காய்ந்த பின்பு கழுவினால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி தடைப்படுவதோடு முகம் பட்டுப்போல் பொலிவடையும். இந்த ஸ்கரப்பை வாரத்திற்கு மூன்று முறை செய்வது நல்லது.

பிரட்டை பாலில் ஊற வைத்து, அதனை முகத்தில் சிறிது நேரம் தேய்க்க வேண்டும். இதனால் முகத்தில் உள்ள முடி நீங்குவதோடு, முகம் பொலிவோடு இருக்கும்.

Image result for bread and milk

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *