பிக்பாஸ் சித்தப்பு வெளியே வந்த வீடியோ ! இது தான் முக்கிய காரணமா ?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சித்தப்பு சரவணன் அண்மையில் கடந்த சில நாட்களாகவே சர்ச்சையில் சிக்கி வருகிறார். அதில், முக்கிய விவாதமாக எழுந்தது கல்லூரியில் அவர் படிக்கும் போதே பெண்களை பஸ்சில் நானும் உரசியுள்ளேன் என்று கூறியது தான். இந்த சம்பவம் கடந்த வாரங்களுக்கு முன் பெரிய விவாதமாக வெடித்து, பிக்பாஸின் மீது பல்வேறு கண்டனங்கள் எழுந்தது.

அதைத்தொடர்ந்து சரவணன் சேரனிடம் டாஸ்கின் விவாதத்தின் போது, ’அப்படித்தாண்டா பேசுவேன்’ என்றும் அவமாரியதையாக அனைத்து போட்டியாளர்களின் முன்பு கோபப்பட்டு சண்டைக்கு எழுந்து நின்றார். அதற்கு வார இறுதியில் கமல் பதிலடி கொடுத்து அறிவுரையும் வழங்கினார்.

இந்நிலையில் இப்படி சித்தப்பு மேல் வீட்டில் பல தவறுகள் இருந்தும் ஏன் அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ப்படவில்லை என்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் மீது பல விமர்சனங்கள் எழுந்தன.
பிக்பாஸ் வெளியேற்றம்

இந்நிலையில் இன்று பிக்பாஸ் சரவணனை கூப்பிட்டு நீங்கள் பேருந்து நெரிசலில் ஆண்கள் தவறான நோக்கத்தில் மட்டும் பயணிக்கிறார்கள் என்ற கருத்து எழுந்தது. அப்போது நீங்கள் உங்கள் கையை உயர்த்தி நீங்களும் உங்கள் காலேஜ் பருவத்தில் இதை செய்திருக்கிறீர்கள் என்று கூறியுள்ளீர்கள்.

 

இதைத்தொடர்ந்து அவர் வெளியேறியதற்கு பல முக்கிய காரணங்கள் இவைதான் என்று வெளியே வந்துள்ளது. அவை பெண்களின் மீது அவர் கூறிய தவறான கருத்தும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மேல் எழுந்த கடும் கண்டனங்களும், விமர்சனங்களாலும், தான் வெளியேற்றப்பட்டார் என்று கூறப்படுகிறது.

Image result for big boss saravanan

மேலும், சரவணன் இதற்கு முன் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் பேசியது தற்போது வைரலாகி வருகிறது, அதில் அவர் நான் நிறை தவறுகளை செய்திருக்கிறேன் என்றும் அப்படி யாரும் இப்போ இருக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார். அந்த காட்சியும் இப்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *