பெண்களை உரசிய சர்ச்சை …கமலை நோக்கி பாயும் தோட்டா ….!

பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியில் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் தொடங்கப்பட்டது. தமிழில் கடந்த 2 சீசன்களும் ஹிட்டடித்ததை தொடர்ந்து தற்போது மூன்றாவது சீசன் தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு சீசன்களையும் தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன்தான் இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன், ஒவ்வொரு வார இறுதியிலும் போட்டியாளர்களிடையே உரையாடுவார். அந்த வாரத்தில் பிக்பாஸ் வீட்டில் நடந்த நிகழ்வுகளின் அடிப்படையில் கமல்ஹாசனின் உரையாடல் அமையும். அந்த வகையில் கடந்த சனிக்கிழமை ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை மீராமிதுன் சேரன் மீது சுமத்திய வீண்பழி குறித்து கமல்ஹாசன் பேசினார். டாஸ்க்கின் போது இயக்குநர் சேரன் தன்னை தவறாக பிடித்து இழுத்ததாக மீராமிதுன் கூறியதை அடுத்து அவருக்கான குறும்படமும் ஒளிபரப்பானது.

Related image

தொடர்ந்து மீராமிதுனிடம் பேசிய கமல்ஹாசன், அரசுப் பேருந்துகளில் செல்லும் பெண்களின் நிலை குறித்தும் பேசினார். பெரும்பாலானோர் பணிக்குச் செல்லும் அவசரத்தில் கூட்டத்தில் முண்டியடித்து செல்கின்றனர். அதில் வேண்டுமென்றே பெண்களை உரச வேண்டும் என்ற எண்ணத்தில் வருபவர்களும் உண்டு என்று கமல்ஹாசன் கூற, தனது கையை உயர்த்தி தானும் கல்லூரி நாட்களில் அவ்வாறு செய்திருப்பதாக தெரிவித்தார். உடனடியாக அங்கு கூடியிருந்த பார்வையாளர்களும் சிரித்து மகிழ்ந்து கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

இந்தக்காட்சியை ட்விட்டரில் குறிப்பிட்டு கருத்து தெரிவித்துள்ள பாடகி சின்மயி, ”பேருந்து பயணத்தில் பெண்களை பாலியல் ரீதியாக தீண்டியதாக ஒருவர் தெரிவிக்கிறார். அதனை தமிழ்த் தொலைக்காட்சி பெருமையாக ஒளிபரப்புகிறது. இதனால் அங்கு பெரும் சர்ச்சை ஏற்பட்டது …..

singer-chinmayi-speaks-about-big-boss-issue

இந்நிலையில் சரவணன் அப்படிப் பேசியதற்கு உடனே எந்த கண்டனத்தையும் தெரிவிக்காத கமல்ஹாசனை நோக்கி இந்த சர்ச்சை தற்போது திரும்பியுள்ளது. அவர் இதற்காக வரும் வார நிகழ்ச்சியில் இதற்கு தனி விளக்கம் அளிப்பாரா என்று எதிர்பார்க்க படுகிறது ….

Image result for பிக் பாஸ் சரவணன்

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *