வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

வாழைப்பழம் முதலில் தோன்றியது ஆசியாவில்தான். கி.மு. 327-ல் அலெக்ஸாண்டர் இந்தியாவுக்கு படையெடுத்து வந்தபோது, வாழைப்பழத்தை விரும்பிச் சாப்பிட்டு இருக்கிறார். திரும்பிப் போகும் போது கிரேக்க நாட்டிலும் மேலை நாடுகளிலும் அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அரேபியர்கள் இதை விற்பனை செய்தனர். வாழைப்பழம் இப்போது போன்று அளவில் பெரிதாக இருந்ததில்லை. விரல் நீளம்தான் இருக்கும். அரேபிய மொழியில் “பனானா’ என்றால் விரல் என்று அர்த்தம். அரேபியர்கள் வாழைப்பழத்துக்கு “பனானா’ என்று பெயரிட்டு அழைத்தனர். நாளடைவில் ஆங்கிலத்திலும் இந்த பெயர் பயன்படுத்தப்பட்டு, உலகம் முழுதும் இன்று “பனானா’ என்று அழைக்கப்படுகிறது


வாழைப்பழத்தில் சர்க்கரை இருப்பதால் உடலுக்கு உடனடியாக ஆற்றலை தருகிறது .இருந்தாலும் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இதில் அமிலத்தன்மை இருப்பதால் குடல் இயக்கங்கள் பாதிக்கப்படும். காலை நேரத்தில் ஏதேனும் உணவை சாப்பிட்ட பின் வாழைப்பழம் சாப்பிடுவதே நல்லது.

வாழைப்பழத்தில் ஏராளமான சத்துக்கள் உள்ளன.இவை இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் , சோர்வு, மலச்சிக்கல், மன அழுத்தம், நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண் ஆகியவற்றை போக்குவதற்கு பெரிதும் உதவுகின்றன.மேலும் வாழைப்பழத்தில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் உடலில் ஹீமோக்ளோபின் அளவு அதிகரித்து இரத்த சோகையை போக்குகிறது.

 

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *