விஜே ரம்யாவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்ததில் என்ன தப்பு?: அமலா பால்

Image result for amala paul and ramya

சென்னை: ஆடை படத்தில் விஜே ரம்யாவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்ததில் என்ன தவறு என்று கேள்வி எழுப்பியுள்ளார் அமலா பால்.

ரத்ன குமார் இயக்கத்தில் அமலா பால் நடித்துள்ள ஆடை படம் நாளை ரிலீஸாக உள்ளது. ஆடை என்று பெயர் வைத்துவிட்டு அமலா பால் எதற்காக நிர்வாணமாக நடித்துள்ளார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

ஆடை படத்தில் நடித்ததை நினைத்து அமலா பால் பெருமையில் உள்ளார்.

ஆடை படத்தில் அமலா பால் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான ரம்யாவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்துள்ளார். அதை பார்த்தவர்கள் ஒரு வேளை ஓரினச்சேர்க்கையாளராக நடித்திருப்பார்களோ என்று பேசத் துவங்கினர். இந்நிலையில் இது குறித்து அமலா பால் விளக்கம் அளித்துள்ளார்.

ஒரு பெண்ணை முத்தமிடுவதில் என்ன தவறு?. அந்த காட்சி தானாக நடந்தது, ஸ்க்ரிப்டில் எழுதி வைத்தது இல்லை. படத்தை பார்த்தால் தான் அது ஏன் நடந்தது என்று உங்களுக்கு புரியும். இந்த படத்தில் நடித்ததன் மூலம் என் நம்பிக்கை அதிகரித்துள்ளது. இந்த உலகில் எந்த சவாலையும் ஏற்க முடியும் என்று உணர்கிறேன். ஆடை படம் கொடுத்த தைரியத்தில் தான் கேடவர் படத்தின் தயாரிப்பாளர் ஆனேன் என்று தெரிவித்துள்ளார் அமலா பால்.

Image result for amala paul and ramya

நான் நிர்வாணமாக நடிக்க வேண்டி உள்ளது என்று என் அம்மாவிடம் கூறினேன். அதற்கு அவரோ, கதைக்கு தேவைப்பட்டால் தாராளமாக நடிம்மா என்றார் என அமலா பால் தெரிவித்துள்ளார். மேலும் அமலா பாலின் காதலரும் ஊக்குவித்துள்ளார். குடும்பத்தார் அளித்த தைரியத்தில் தான் அமலா ஆடையில்லாமல் நடித்தாராம்.

Image result for ramya in aadai

அமலா பால் ஆடையில்லாமல் நடித்துள்ளதை பார்த்து அவரை பற்றி கேவலமாக விமர்சித்தவர்கள் தற்போது அவர் அளித்துள்ள பேட்டிகளை பார்த்த மேலும் மோசமாக பேசுகிறார்கள். யார் என்ன வேண்டுமானாலும் பேசுங்கள், எனக்கு கவலையே இல்லை என்று ஆடை படத்திற்கு விளம்பரம் தேடிக் கொண்டிருக்கிறார் அமலா பால்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *