தமிழக அரசுக்கு ஊழியர்களுக்கு சம்பளம் பணமில்லை?

சென்னை : அரசு போக்குவரத்து கழகங்களில், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக்கூட பணமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து, சென்னையில், நேற்று மாநகர போக்குவரத்து கழக ஊழியர்கள், பஸ்களை இயக்காமல், திடீரென ஸ்டிரைக்கில் ஈடுபட்டது, தமிழக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.சென்னை மாநகர போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு, ஜூன் மாத சம்பளத்தில், 62 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டது. மீதமுள்ள, 38 சதவீதம் பின்னர் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது.இதை ஏற்க மறுத்த போக்குவரத்து கழக ஊழியர்கள், ‘மீதமுள்ள, 38 சதவீதத்தை வழங்காத வரை, பஸ்களை இயக்க மாட்டோம்’ என, நேற்று அதிகாலை, 4:00 மணி முதல், திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

Image result for tamilnadu government staff

இதனால், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் என, பல தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.சட்டசபை கூட்டம் நேற்று நடந்த நிலையில், சென்னையில் நடந்த போராட்டம், தமிழக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.இந்நிலையில், நேற்று மாலை, தொழிற்சங்கத்தினருடன், அரசு நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதால், ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது.இதுகுறித்து, தொ.மு.ச., செயலர், நடராஜன் கூறியதாவது:உரிய நேரத்தில், முழு சம்பளமும் வழங்க வேண்டும் என, தொழிலாளர்கள்,தன்னெழுச்சியாக போராடியுள்ளனர். அவர்கள் சார்பில், நிர்வாகத்திடம் பேசினோம். அவர்களும், சம்பள கோரிக்கையை ஏற்றுள்ளனர்.

Image result for tamilnadu government staff

மற்ற கோரிக்கைகள் குறித்து, சில தினங்களில் பேச உள்ளோம். தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது, நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால், மீண்டும் போராட்டம் வெடிக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.போக்குவரத்து துறை அமைச்சர், விஜயபாஸ்கர் கூறியதாவது:போக்குவரத்து ஊழியர்களுக்கு, ஜூன் மாதத்துக்கான சம்பளம் முழுவதும், இன்று (நேற்று) மாலைக்குள் வழங்கப்படும். ஞாயிற்றுக்கிழமை என்பதால், நேற்று முன்தினம் வழங்க முடியவில்லை. இந்நிலையில், நான்கு பணிமனைகளில், 80 சதவீதம் ஊழியர்கள், எதிர்க்கட்சி தொழிற்சங்கங்களின் துாண்டுதலால் பணி செய்யவில்லை.

பொதுமக்களுக்கு சேவையாற்றும் வகையில், ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். போக்குவரத்து கழக நஷ்டம், தி.மு.க., ஆட்சியிலும் இருந்தது. அதை சரி செய்ய, முதல்வரிடம் பேசி வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.இதனிடையே, அமைச்சர், விஜயபாஸ்கர், தன், ‘டுவிட்டர்’ பக்கத்தில், ‘போக்குவரத்து ஊழியர்களுக்கான சம்பளம் வழங்கப்பட்டு விட்டது’ என, குறிப்பிட்டுள்ளார்.***

Image result for tamilnadu government staff

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *