இந்த விஷயத்தில் ஆண்களைவிட பெண்களே விரைவில் …….அதிர்ச்சி ரிப்போர்ட்

Related image

 

இக்காலத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு வயது முதிர்வு பிரச்சனை மிக அதிகமாகவே காணப்படுகிறது. இளம் வயதிலேயே வயதான தோற்றத்தை பலரும் அடைந்து விடுகின்றனர் .

முடி நரைத்து விடுகிறது. கண்களுக்குக் கீழே கருவளையம் வந்துவிடுகிறது. சருமம் பொலிவிழந்து காணப்படுகின்றன.

நமது உடலில் வாதம், பித்தம் அதிகமாவதால் வெகு விரைவிலேயே வயதான தோற்றத்தை அடைகிறோம் என்று ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது.

Image result for வயது முதிர்வு

அளவுக்கு அதிகமான காரம், புளிப்பு உணவுகளை எடுத்துக்கொள்வது. வறுக்கப்பட்ட உணவுகள், அதிக நேரம் காய்ந்து உலர்ந்து இருக்கும் உணவுகள்.

ஜெர்மனியைச் சேர்ந்த வியேனா பல்கலைக்கழகத்தின் சார்பில், ஒருவருக்கு எந்த வயதில் முதிய தோற்றம் ஏற்படத் தொடங்குகிறது என்பது குறித்த ஆய்வொன்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. 20 முதல் 90 வயதுக்குட்பட்ட 88 ஆண்கள் மற்றும் பெண்கள், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அதன் முடிவில், ஆண்களைவிடவும் பெண்களுக்குத்தான் விரைவாக முதிய தோற்றம் ஏற்படுகிறது என்பது தெரியவந்துள்ளது.

குறிப்பாக, பெண்கள் 50 வயதைக் கடக்கும்போது… அதாவது, சராசரியாக மெனோபாஸ் காலத்தைச் சந்திக்கும் நேரத்தில், அதன் காரணமாக அவர்களுக்கு அதிவேகமாக வயது முதிர்வு ஏற்படுவது தெரியவந்துள்ளது. கண்களைச் சுற்றிலும் சுருக்கம் ஏற்படுவது, மூக்கு மற்றும் காது பகுதி சருமங்கள் நீள்வது போன்ற முதிய தோற்றத்துக்கான அறிகுறிகள் அதிகமாகக் காணப்படுவது தெரியவந்துள்ளது. உடலில் கொழுப்புச்சத்து குறைந்துகொண்டேபோவதால், பெண்களுக்கு விரைவாக உடல் எடை குறைந்து, தோல் ஒட்டிவிடுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *