விராட் கோலி, பும்ரா புராணத்தை நிறுத்துங்க.. தோனியால மட்டும் தான் அதை செய்ய முடியும்!!

Image result for dhoni and virat kohli

2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியா அரையிறுதி செல்லும், கோப்பை வெல்லும் என பல நாடுகளை சேர்ந்த ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்களும் கூறி வருகின்றனர். ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் முன்னணியில் இருக்கும் இந்திய வீரர்கள் விராட் கோலி மற்றும் பும்ராதான் இந்திய அணியின் உலகக்கோப்பை வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக இருப்பார்கள் என பலரும் கோலி – பும்ரா புராணம் பாடி வருகின்றனர். ஆனால், உண்மை என்ன?
Image result for dhoni and virat kohli
தற்போதுள்ள சூழ்நிலைப்படி, இந்தியா உலகக்கோப்பை வென்றால் அதற்கு அனுபவம் கொண்ட மூத்த வீரர் தோனிதான் முக்கிய காரணமாக இருப்பார். விராட் கோலி, பும்ராவை காட்டிலும், தோனியால் மட்டும் தான் மீண்டும் இந்திய அணிக்கு உலகக்கோப்பை வென்று கொடுக்க முடியும். எப்படி தெரியுமா?
Image result for dhoni and virat kohli
இது எப்படி என புரிந்து கொள்ள வேண்டும் என்றால் ஐபிஎல் தொடரில் இவர்களின் செயல்பாடுகளை நாம் பார்க்க வேண்டும். ஐபிஎல் தொடரில் தனிப்பட்ட முறையில் விராட் கோலி, பும்ரா, தோனி மூவருமே சிறப்பாக செயல்பட்டனர். ஆனால், இவர்களில் யார் தனியாளாக வெற்றி தேடிக் கொடுத்தது என்பதை பார்த்தாலே பாதி விஷயம் புரிந்து விடும்.
Image result for dhoni and virat kohli
விராட் கோலி போட்டிக்குப் போட்டி நன்றாக ஆடியும் பெங்களூர் அணியால் தொடர் வெற்றிகளை குவிக்க முடியவில்லை. அதே போல, பும்ரா, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக பந்து வீசினாலும், அவருடன் மலிங்கா, ராகுல் சாஹர், ஹர்திக் பண்டியா போன்ற திறன் வாய்ந்த பந்துவீச்சாளர்களும் இருந்தனர். அவர் தனி ஆவர்த்தனம் செய்யவில்லை.
Image result for dhoni and virat kohli
ஐபிஎல் தொடரில் தங்கள் அணிகளுக்கு ஒரீரு போட்டிகளில் கோலியும், பும்ராவும் தனியாக தங்கள் அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தனர். ஆனால், மறுபுறம் தோனி ஒவ்வொரு போட்டியிலும் பேட்டிங், விக்கெட் கீப்பிங் அல்லது கேப்டன்சி என ஏதோ ஒரு வகையில் தனியாளாக ஆதிக்கம் செலுத்தி வந்தார்.
Image result for dhoni and virat kohli
சில சமயம், தோனியின் பங்கேற்பு ஸ்கோர்போர்டில் தெரியும். சில முறை, மறைமுகமாக மற்ற வீரர்களின் வெற்றிக்கு பின்னால் இருப்பார். எப்படி பார்த்தாலும், தோனியை வெறும் விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேன் என்று மட்டுமே நாம் கருத முடியாது. அவருக்கு எப்படி வெற்றிகளை பெற வேண்டும் என்பது தெரியும்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *