எளிமையின் மருத்துவ மற்றும் அழகு டிப்ஸ்…

Image result for lemon

அதிமதுரத்தை பொடி செய்து அதனுடன் சிறிது குங்குமப்பூ சேர்த்து பால் விட்டு கலக்கி தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்வது குறைந்து முடி வளரும். பொடுகு குறையும்.

Image result for lemon

தாமரை, ரோஜா, ஆகிய மலர்களில் ஒன்றை எடுத்து அடிக்கடி கண்களில் ஒற்றிக் கொண்டால் கண் இமைகள் அழகுடன் காட்சியளிக்கும்.

முட்டையின் வெள்ளைக் கருவுடன் எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து முகத்தில் தடவி வந்தால் முக சுருக்கங்கள் குறையும்.

Image result for lemon

எலுமிச்சை பழச்சாறுடன் வெள்ளரிக்காய் சாறு கலந்து கரும்புள்ளி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் கரும்புள்ளிகள் குறையும்.

Related image

பாதாம் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் எடுத்து நன்றாக கலந்து தலையில் தேய்த்து நன்கு ஊறிய பிறகு தலைக்கு குளித்து வந்தால்  பொடுகு குறையும்.

Image result for lemon

தேன் மற்றும் எலுமிச்சை பழச்சாறு கலந்து முகம் கழுவி வந்தால் தோல் சுருக்கம் குறைந்து பளபளப்பாகும்.

Related image

தயிரில் கசகசாவைச் சேர்த்து அரைத்து தினமும் இரவு படுக்கச் செல்லும் முன்பாக பூசி வந்தால் முகம் பளப்பளப்பாகும்.

Image result for lemon

முட்டையின் வெள்ளை கருவை எடுத்து நன்றாக கலக்கி உச்சந்தலை மற்றும் முடியில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு குளித்து  வந்தால் முடி உதிர்வது குறையும்.

Image result for lemon

நெல்லிக்காயை சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து  உடல் பருமன் குறையும்.

Image result for lemon

பலாப்பழம் எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் முகம் பொலிவு பெற்று சதை போட்டு இளமை  கூடும்.

Image result for lemon

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *