அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்…

Related image

ஹைலைட்ஸ்

  • தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் 91 வயதில் இன்று காலமானார்.
  • தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருதும் சிறந்த நூலாசிரியர் விருதும் பெற்றவர்.
Related image

1950ஆம் ஆண்டில் கணித ஆசிரியராக தனது பயணத்தை தொடங்கிய இவர், தமிழக தமிழ் வளர்ச்சித்துறையில் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்துள்ளார். 1989ஆம் ஆண்டு உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராக இருந்துள்ளார்.

Related image

முதுபெரும் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பா இன்று உடல்நல குறைவால் காலமானார்.

Image result for silamboli chellappan

1950ஆம் ஆண்டில் கணித ஆசிரியராக தனது பயணத்தை தொடங்கிய இவர், தமிழக தமிழ் வளர்ச்சித்துறையில் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்துள்ளார். 1989ஆம் ஆண்டு உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராக இருந்துள்ளார்.

Related image

தமிழுக்கு இவரது சேவையை பாராட்டும் விதமாக 1999ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் விருதும், 2006ஆம் ஆண்டு சிறந்த நூலாசிரியர் விருதும் வழங்கப்பட்டது.

Related image

91 வயதான சிலம்பொலி செல்லப்பன் நாமக்கல் மாவட்டம் சிவியாம்பாளையத்தில் 1928 ஆம் ஆண்டு பிறந்தார். சென்னை திருவான்மியூரில் உள்ள அவரது மகன் கொங்கு வேல் வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் மூப்பினால் ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக இன்று காலை வீட்டிலேயே அவரது உயிர் பிரிந்தது.

Related image

பொதுமக்கள் மற்றும் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் சென்னை திருவான்மியூரில் உள்ள அவரது மகன் வீட்டில் இன்று மதியம் 2 மணி முதல் நாளை காலை 8 மணி வரை வைக்கப்படுகிறது.

Image result for silamboli chellappan

நாளை காலை 8 மணிக்கு அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு திங்களன்று மதியம் 12 மணியளவில் இறுதி சடங்குகள் செய்யப்படவுள்ளன.

Image result for silamboli chellappan

மறந்த சிலம்பொலி செல்லப்பன்வின் உடல் திங்களன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளதால், என்பார்மிங் செய்வதற்காக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Related image

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *