பெண்களுக்கு இலவசம் : பா.ஜ., முதல்வருக்கு கெஜ்ரிவால் பதிலடி

Image result for முதல்வர் கெஜ்ரிவால்

பெண்களுக்கு டில்லி அரசு, இலவச பஸ் பயணம் வழங்கக் கோரி கேட்ட குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு, டில்லி முதல்வர் கெஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார்.

சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்த விஜய் ரூபனி, டில்லி முதல்வர் ரூ.191 கோடி செலவழித்து தனக்காக விமானம் வாங்குவதற்கு பதில் பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச சேவை வழங்கலாம் என கூறி இருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள கெஜ்ரிவால், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு குரல் எழுப்பிய போதும் நாங்கள் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதி அளித்துள்ளோம். இதற்கான பணம் எங்கிருந்து வந்தது என மக்கள் கேட்கிறார்கள். எனது சகோதரிகளுக்கு இலவச பயணம் அளிப்பதற்கு பதில், நான் எனது தேவைக்காக எந்த விமானமும் வாங்கவில்லை. புதிய சாலைகள் அமைப்பதற்கு புதிய செலவில் பொருட்கள் ஏதும் வாங்கவில்லை. பழைய பொருட்களைக் கொண்டே சாலை புதுப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

டில்லி அரசின் திட்டங்கள் தாங்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை என டில்லி எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி இருந்ததாகவும் விஜய் ரூபானி கூறி இருந்தார். அக்.,29 ம் தேதி டில்லி அரசு பெண்களுக்கு இலவச பயணம் வழங்கியது. ஆனால் அதற்கு பிறகு நடந்த டில்லி சட்டசபை தேர்தலில் போது, இதனை பா.ஜ., கடுமையாக விமர்சித்தது. அரசியல் ஆதாயத்திற்காக இலவசங்களை கொடுப்பதாக பா.ஜ., விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *