அன்றும் ,இன்றும், என்றும் ஏன் நயன்தாரா லேடி சூப்பர்ஸ்டார் தெரியுமா ??

Image result for nayanthara aegan

நாம் எத்தனையோ திரைப்படங்களைப் பார்க்கிறோம். அதுவும் விதவிதமான கதைகளத்தில். சில கதைகள் நம்மை உலுக்கும், சில கதைகள் நம் மனதை லேசாக்கும். இன்னும் சில படங்களோ தொண்டைக்கும் வாய்க்கும் இடையே சிக்கி, நம்மை விம்மி விம்மி உள்ளுக்குள் அழ வைக்கும்.

Happy Birthday nayanthara, lady superstar nayanthara

இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாரா

கதைகளைப் போல சில கதாபாத்திரங்களையும் நம்மால் எளிதில் மறந்துவிட முடியாது. ஏனெனில் சில பாத்திரங்கள் நம்மைப் போலவும், இன்னும் சில நம் பக்கத்து வீட்டு நபர் போன்று மிக இயல்பாக படைக்கப்பட்டிருக்கும். வேறு சில பாத்திரங்களோ, நம்மால் நிஜ வாழ்க்கையில் செய்ய முடியாததை, திரையில் செய்துக் காட்டி நம்மை நெகிழ வைக்கும்.

Happy Birthday nayanthara, lady superstar nayanthara

லேடி சூப்பர் ஸ்டார்!

அப்படியான ஒரு நடிகை / கதாபாத்திரம் தான் நயன்தாரா. தமிழ் சினிமாவில் எத்தனையோ சிறந்த நடிகைகள் இருக்கிறார்கள். ஆனால் நயன்தாரா மட்டும் ஏன் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார்? காரணம் அவரது திரை வாழ்க்கை அல்ல, நிஜ வாழ்க்கை.

Happy Birthday nayanthara, lady superstar nayanthara

மாயா திரைப்படத்தில்…

சிம்புவுடனான காதல் முறிவுக்குப் பின் பிரபுதேவாவுடன் உறவிலிருந்த நயன்தாரா, அவரை திருமணம் செய்துக் கொண்டு இல்வாழ்க்கையில் கவனம் செலுத்துவதற்காக இனி திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை எனவும் அறிவித்தார். ஒருவேளை அது நடந்திருந்தால், நயன்தாராவை இன்று எத்தனைப் பேர் ஞாபகம் வைத்திருப்பார்கள் எனத் தெரியவில்லை.

Happy Birthday nayanthara, lady superstar nayanthara

பெரும் வரவேற்பைப் பெற்ற அறம் திரைப்படத்தில்

அந்த உறவும் திருமணத்தில் கைகூடாமல், முறிந்துப் போக துவண்டு விடாமல், ’ராஜா ராணி’ திரைப்படத்தில் ரீ எண்ட்ரி கொடுத்தார். இவ்வளவு பிரச்னைக்குப் பிறகும் நடிக்க வந்திருக்கிறாரே, நீடிப்பாரா? என்ற எண்ணம் பலரது மனதில் இருந்தது. அதையெல்லாம் தனது அடுத்தடுத்தப் படங்களால் தவிடு பொடியாக்கிக் கொண்டே இருந்தார்.

Happy Birthday nayanthara, lady superstar nayanthara

ஐரா திரைப்படத்தில்

முன்பை விட மிக அதிகமான படங்களில் நடித்து, தனது மறு முகத்தைக் காட்டினார். பொதுவாக ‘ரீ எண்ட்ரி’, ‘கம்பேக்’ எல்லாம் அனைவருக்கும் ஒர்க் அவுட் ஆகிவிடாது. அப்படியே ஆனாலும் அதை தக்க வைத்துக் கொள்ள அவர்கள் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். இந்த விஷயத்தில் நயன்தாரா மிக கவனமாக தனது கரியரை நிலை நிறுத்திக் கொண்டுள்ளார்.

Happy Birthday nayanthara, lady superstar nayanthara

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நயன்தாரா!

எத்தனை பிரச்னைகளை சந்தித்தாலும், அதை துணிச்சலுடன் எதிர் கொண்டு, தனது படங்களின் மூலம் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் நயன் பல பெண்களுக்கு முன்னுதாரணம். மேலே சொன்னதை இங்கு நினைவுப் படுத்துகிறோம், தமிழ் சினிமாவில் எத்தனையோ சிறந்த நடிகைகள் இருக்கலாம். ஆனால் நயன்தாரா எதிர் கொண்ட பிரச்னைகளை வேறு யார் சந்தித்திருந்தாலும், இப்படி தைரியமாக கையாள முடிந்திருக்குமா என்பது கேள்விக் குறியே. அதனால் தான் அவர் லேடி சூப்பர் ஸ்டார்! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நயன்!

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *