போனிகபூருடன் சந்திப்பு….. வலிமை படத்தில் நடிக்கிறாரா நயன்தாரா?

Image result for nayanthara with boney kapoor
நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு அஜித்குமார் ‘வலிமை’ படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். ‘வலிமை’  அதிரடி ஆக்‌ஷன் படமாக தயாராகிறது. அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்காக தோற்றத்தை இளமையாக மாற்றி இருக்கிறார். மோட்டார் சைக்கிள் பந்தயம் மற்றும் கார்பந்தய காட்சிகள் இப்படத்தில் இடம்பெறுகின்றன.
போனிகபூருடன் சந்திப்பு..... வலிமை படத்தில் நடிக்கிறாரா நயன்தாரா?
அருண் விஜய்யை வில்லனாக நடிக்க வைக்க பரிசீலிக்கின்றனர். கதாநாயகியாக நயன்தாரா, திரிஷா, தமன்னா, நஸ்ரியா ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார் என்று பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நயன்தாராவும் அவரது காதலர் விக்னேஷ் சிவனும் போனிகபூரை சந்தித்து பேசி உள்ளனர்.போனிகபூர் அவர்களுக்கு விருந்து அளித்துள்ளார். அப்போது போனிகபூரின் மகள் குஷி கபூரும் உடன் இருந்தார். இவர்களுடன் நயன்தாரா இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. சந்திப்பின்போது அஜித்தின் வலிமை படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பது குறித்து நயன்தாராவுடன் போனிகபூர் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கலாம் என்று தகவல் பரவி வருகிறது.
நயன்தாரா
ஆனாலும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஏற்கனவே பில்லா, ஏகன், ஆரம்பம், விஸ்வாசம் ஆகிய படங்களில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா தற்போது ரஜினிகாந்தின் தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து கொரிய மொழி படத்தின் தமிழ் ரீமேக்காக தயாராகும் ‘நெற்றிக்கண்’ படத்திலும் ஆர்.ஜே பாலாஜி இயக்கவுள்ள மூக்குத்தி அம்மன் படத்திலும் நடிக்க உள்ளார்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *