கோபம் வந்தா என்ன வேணுனா பண்ணுவீங்களா? ஆஸி வீரருக்கு தடை விதித்து அதிரடி காட்டிய..?

Pattinson

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஷேஃபீல்டு ஷீல்டு என்ற தொடரும் ஒரு முக்கியமான தொடராகும். இந்த தொடரில் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு போட்டியில் விக்டோரியா மற்றும் குயின்ஸ்லேண்ட் ஆகிய அணிகள் மோதின.

Pattinson 1

இந்த போட்டியில் விக்டோரியா அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பட்டின்சன் அதே அணியின் சக வீரரை பீல்டிங் செய்யும்போது கோபத்தில் தகாத வார்த்தைகளை கொண்டு சரமாரியாக தொடர்ந்து திட்டியதாக தெரிகிறது. இது குறித்து பேட்டின்சன் மீது அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் விசாரணை நடத்தியது.இந்நிலையில் அவர்மீதுள்ள குற்றச்சாட்டை உறுதி செய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு அவர் விதிமுறைகளை மீறியதாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமே தடை விதித்துள்ளது. இதே போன்று அவர் ஏற்கனவே இரண்டு முறை செய்துள்ளதால் ஒரு போட்டியில் விளையாட தடை செய்யப்பட்டு உள்ளார்.

Pattinson 2

எனவே இதன் காரணமாக பிரிஸ்பேனில் வருகிற 20-ஆம் தேதி துவங்கும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக மிட்செல் ஸ்டார்க் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் இதனை அந்த அணியின் கேப்டன் டிம் பெயின் உறுதிப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *