அசர வைக்கும் இலங்கை வீரரின் பவுலிங் முறை, திணறிய ஆடுகளம் #video

Image result for kevin koththigoda

அபுதாபியில் நடந்த டி 10 லீக்கில் இலங்கையின் கால் சுழற்பந்து வீச்சாளர் கெவின் கோத்திகோடா  பந்து வீச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Related image

நேற்று நடந்த ஆட்டத்தில் பங்களா புலிகள், டெக்கான் கிளாடியேட்டர்ஸ் இடையில்  டி 10  போட்டி நடைபெற்றது. அப்போட்டியில், ஷேன் வாட்சன், அன்டன் டெவ்சிச் போன்றோர்களுக்கு கெவின் கோத்திகோடா பந்து வீச்சு  சிப்பசொப்பனமாகவே இருந்தது.

 

 

கோத்திகோடாவின் பௌலிங் ஆக்ஷன் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பால் ஆடம்ஸுடன் ஒப்பிடும்படி உள்ளது என சிலர் கருத்தும் பதிவு செய்து வருகின்றார். ‘ frog in a blunder’  என்று பெயர்வாங்கிய பால் ஆடம்ஸ் சில ஆண்டுகளுக்கு சர்வேதச அளவில் புயலைக் கிளப்பியிருந்தார்.

கெவின் கோத்திகோடா சனிக்கிழமை நடத்த போட்டியில்  2 ஓவர்கள் மட்டும் பண்டு வீசி   22 ரன்கள் விட்டுக் கொடுத்தார் . இருந்தாலும், பல  சந்தர்ப்பங்களில் வாட்சனை திக்குமுக்காட வைத்தார். இருந்தாலும் , அனுபவம் வாய்ந்த வாட்சன்  இரண்டு முறை சிக்ஸருக்குத் தள்ளினார் .

கோத்திகோடா 2017 ம் ஆண்டு நடந்த யு -19 ஆசிய கோப்பையில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

2017 ம் ஆண்டில் அவரது பயிற்சியாளர் தம்மிகா சுதர்ஷனா  கிரிக் பஸ்ஸிடம்  இது குறித்து தெரிவிக்கையில், ” கோத்திகோடா அசைவு மிகவும் அசாதாரணமானது. இது பால் ஆடம்ஸைப் போன்றது. இந்த ஆக்ஷன் பயிற்சியின் மூலமாக வந்தது அல்ல, அது இயல்பாகவே அவருக்கு வந்தது. தன்னுடைய ஆக்ஷனால்  அவரால்  ஆடுகளத்தைக் கூட ஒழுங்காக பார்க்க முடியாது. எனவே, ஆரம்பத்தில், துல்லியாமாக ஸ்டம்பை டார்கெட்  செய்ய போராடிக் கொண்டிருந்தார், ஆனால் தற்போது  மிகவும் முன்னேறியுள்ளார், ”என்று கூறியிருந்தார்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *