இதுபோன்ற ஒரு பந்துவீசும் ஸ்டைலை பார்த்திருக்க வாய்ப்பே இல்லை! வைரலாகும் வீடியோ..

Kevin

கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீச்சாளர்கள் உடனடியாக பிரபலமாவதற்கு அவருடைய பந்துவீசும் ஆக்ஷனும் மற்றும் பந்துவீசும் ஸ்டைலும் ஒரு முக்கிய காரணமாக அமைந்திருப்பதை நாம் பலவற்றை பார்த்திருக்கிறோம். அந்த வரிசையில் இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா அவரது வித்தியாசமான பவுலிங் ஸ்டைலாலே ரசிகர்களால் கவரப்பட்டார்.

மேலும் அதனை போன்ற இலங்கை அணியின் வீரரான மலிங்காவும் தனது வித்தியாசமான ஸ்டைலில் மிகப் பெரிய பந்து வீச்சாளராக உருவெடுத்து கிரிக்கெட் உலகை பிரமிக்கவைத்தார். அதனைப் போன்று தற்போது ஸ்ரீலங்கா அணியை சேர்ந்த கெவின் என்கிற 21 வயது உள்நாட்டு பந்துவீச்சாளர் அபுதாபியில் நடைபெற்றுவரும் டி10 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார்.அவரது பந்து வீச்சு முறை வழக்கத்திற்கு மாறாக மிகவும் வித்தியாசமான முறையில் உள்ளது. இவரைப் பார்த்தால் பும்ரா மற்றும் மலிங்கா ஆகியோர் தோற்று விடுவார்கள் என்றே கூறலாம். அந்த அளவிற்கு உடைய பந்துவீச்சில் வித்தியாசமான முறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் பந்துவீசும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகஅளவு பகிரப்படும் வருகிறது.

 

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *