திரையில் வைத்த சில நிமிடங்களிலேயே தமிழ் ராக்கர்ஸில் லீக்கான விஷாலின் ’ஆக்‌ஷன்’

Related image

இயக்குநர் சுந்தர் சி. இயக்கத்தில் விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சாயா சிங், ராம்கி உள்ளிட்டோர் நடித்துள்ள ’ஆக்‌ஷன்’ திரைப்படம் . டட்லி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஹிப்பாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். ’ஆக்‌ஷன்’ திரைப்படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் தயாரித்துள்ளார். முழுக்க முழுக்க ’ஆக்‌ஷன்’ களத்தில் வெளிநாட்டில் படமாக்கப்பட்டிருக்கும் ’ஆக்‌ஷன்’ திரைப்படம் நேற்று வெளியானது.

Image result for sundar c

சுந்தர் சி-யின் படங்கள் என்றாலே, காமெடியும் குடும்பங்களை கவரும் எலிமெண்டுகளும் கட்டாயம் இடம் பிடித்திருக்கும். ஆனால் ஆக்‌ஷன் திரைப்படத்தைப் பொறுத்தவரை, அதெல்லாம் மிஸ்ஸிங். சுந்தர்.சி-யின் படமா இது என்று கேட்கும் அளவுக்கு அப்படியே எதிர்மாறாக உள்ளதாக ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.

இந்நிலையில், இந்தப் படம் தமிழ்ராக்கர்ஸ், தமிழ்கன், டோரண்ட் ஆகிய இணையதள பக்கங்களில் வெளியாகியுள்ளன. திருட்டு விசிடி, ஆன்லைன் லீக் ஆகியவற்றிற்கு எதிராக குரல் கொடுத்து வரும் விஷாலின் படம் இப்படி ஆன்லைனில் லீக்காகியிருப்பதால், கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *