பார்லி., கூட்டம் முக்கியமானது: மோடி

Image result for modi

இந்த பார்லி., கூட்டம் மிக முக்கியமானது இதனை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பார்லி., குளிர்கால கூட்டதொடர் இன்று துவங்குகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி பார்லி., வளாகத்தின் வெளியே நிருபர்களிடம் அவர் பேசுகையில்;

Image result for modi

கடந்த பார்லி., கூட்டம் மிக சிறப்பாக அமைந்தது. இதுபோல் இந்த கூட்டத்தொடரும் நல்ல முறையில் அமையும் என நம்புகிறேன். அதிலும் இந்த ஆண்டின் இறுதி கூட்டம் இதுவாகும். மேலும் இது ராஜ்யசபாவின் 250 வது கூட்டம். வரும் நவ.26 இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடவிருக்கிறோம். இத்தருணத்தில் நடக்கும் இந்த கூட்டத்தொடர் மிக சிறப்பு வாய்ந்ததாக அமையட்டும். பயனுள்ளதாக இருக்க வேண்டும்.

Image result for modi

அனைத்து விஷயங்களையும் திறந்தமனதுடன் விவாதிக்க நாங்கள் விரும்புகிறோம். சுமுகமான முறையில் நடக்க எதிர்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு மோடி கூறினார்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *