தலைமை நீதிபதியாக பாப்டே இன்று பதவியேற்பு

Image result for சரத் அரவிந்த் பாப்டே

உச்ச நீதிமன்றத்தின், 47வது தலைமை நீதிபதியாக, நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டே, இன்று (நவ.18) பதவியேற்கிறார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகோய் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள, மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பாப்டே, 63, இன்று பதவியேற்கிறார்.மஹாராஷ்டிர மாநிலம், நாக்பூரில், வழக்கறிஞர்கள் குடும்பத்தில் பிறந்தவர், நீதிபதி பாப்டே. இவருடைய தந்தை, அரவிந்த் ஸ்ரீநிவாஸ் பாப்டே, பிரபலமான மூத்த வழக்கறிஞர்.நாக்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவு செய்த, எஸ்.ஏ.பாப்டே, உச்ச நீதிமன்றத்தில், 21 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றினார். மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி, மத்திய பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி னார், 2013ல், உச்ச நீதிமன்ற நீதிபதியானார்.அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம், தனிமனித சுதந்திரம் உட்பட பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்பு அளித்துள்ளார். வரும், 2021 ஏப்., 23 வரை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பார்.

இந்த நிலையில், வட கிழக்கு மாநிலத்தில் இருந்து, முதல் முறையாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியானவர் என்ற பெருமையை பெற்ற ரஞ்சன் கோகோய், நேற்றுடன் ஓய்வு பெற்றார்.ஏழுமலையான் வழிபாடுதிருமலை ஏழுமலையானை, நேற்று காலை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தன் குடும்பத்தினருடன் வழிபட்டார்.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், பணியிலிருந்து ஓய்வு பெற உள்ளதை ஒட்டி, தன் குடும்பத்தினருடன், நேற்று காலை, ஏழுமலையானை தரிசித்தார். நேற்று முன்தினம் மாலை திருமலைக்கு வந்த அவர், மாலையில் நடந்த சகஸ்ரதீபலங்கார சேவையில் பங்கேற்றார்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *