கமல் இன்னும் 60 ஆண்டுகள் இருக்கணும் : இளையராஜா ஆசை

Image result for kamal hassan and ilayaraja

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், நடிகர் கமல் திரையுலகில் இன்னும் 60 ஆண்டுகள் இருக்க வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
Kamal60, Kamalhaasan, UngalNaan, Ilayaraja, நடிகர், கமல், கமல்60, இளையராஜா, கமல்ஹாசன்
மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும், நடிகருமான கமலின் 65வது பிறந்தநாள் விழாவை வெகு சிறப்பாக கொண்டாட, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் முடிவெடுத்தது. அதன்படி, நவ.,7ம் தேதி பரமக்குடியில் கமலின் இல்லத்தில், அவருடைய அப்பா மறைந்த சீனிவாசனின் உருவ சிலையும், நவ.,8ல் சென்னை ஆழ்வார் பேட்டையில் மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தரின் சிலையும் திறந்து வைக்கப்பட்டது.

அடுத்ததாக, சென்னை நேரு உள்விளையாட்டு மைதானத்தில் கமல், திரைத்துறைக்கு வந்து 60 ஆண்டுகள் ஆனதையொட்டி ‘கமல் 60’ நிகழ்ச்சி நடந்தது. இதில், திரைத்துறையினர் பலர் கலந்து கொண்டனர். அதில், தமிழகம் முழுவதும் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களை ஏற்படுத்த கமல் சார்பில் 1கோடி ரூபாயை கமலும், ரஜினியும் இணைந்து வழங்கினர். நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா பேசுகையில், கமல் இன்னும் 60 ஆண்டுகள் திரையுலகில் இருக்க வேண்டும், என்றார். இந்நிகழ்ச்சி தொடர்பான #Kamal60 ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரண்டானது.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *