புதிதாகப் பிரிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்களும், எஸ்.பி-க்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை நேற்று தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது.
அதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு கிரண் குராலா, தென்காசி மாவட்டத்திற்கு, ஜி.கே. அருண் சுந்தர் தயாளன், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு திவ்யதர்ஷினி, திருப்பத்தூர் மாவட்டத்திற்கு சிவன் அருள், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஜான் லூயிஸ் ஆகியோர் மாவட்ட ஆட்சியர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய 5 புதிய கலெக்டர்களும் இதற்கு முன் அந்தந்த மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகளாக பணியாற்றி வந்தவர்கள். தற்போது அதே மாவட்டங்களுக்கு ஆட்சியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Collectors for newly created districts
அதோடு மேற்குறிப்பிட்டுள்ள மாவட்டங்களுக்கு எஸ்.பி-க்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளராக உள்ள விஜயகுமார், திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். திருவல்லிக்கேணி துணை கமிஷனர் சுகுணா சிங் தென்காசி மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை பட்டாலியன் கமாண்டண்ட் ஜெயச்சந்திரன் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பியாகவும், காஞ்சிபுரம் எஸ்.பியாக உள்ள கண்ணன், செங்கல்பட்டு மாவட்டத்திற்கும், திருச்சி துணை கமிஷனர் மயில்வாகனன் ராணிப்பேட்டை மாவட்டத்துக்கும் எஸ்.பிக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.சென்னை