நிலைக்குழு கூட்டங்களை எம்.பி.க்கள் புறக்கணிப்பதா? – வெங்கையா நாயுடு கவலை

Image result for வெங்கையா நாயுடு

நாடாளுமன்ற மாநிலங்களவையின் 250-வது கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதையொட்டி, மாநிலங்களவையில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. அதில், மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்றார்.கூட்டத்தில் அவர் பேசியதாவது:-துறைரீதியான நாடாளுமன்ற நிலைக்குழுக்கள், பிரச்சினைகளை விரிவாக ஆராய்வதற்கான உறுதியான அமைப்பாகும். ஆனால், அத்தகைய நிலைக்குழு கூட்டங்களில் சமீபகாலமாக எம்.பி.க்கள் பங்கேற்காமல் தவிர்ப்பதாக வெளியாகும் தகவல்கள் கவலை அளிக்கிறது.
நிலைக்குழு கூட்டங்களை எம்.பி.க்கள் புறக்கணிப்பதா? - வெங்கையா நாயுடு கவலை
எம்.பி.க்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும். அவர்கள் பங்கேற்பதை அவர்களுடைய கட்சி தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான், நிலைக்குழுக்கள் தங்கள் கடமையை சரியாக செய்ய முடியும். அந்த குழுக்களின் தரம் தாழ அனுமதிக்கக்கூடாது.
இதுபோல், நாடாளுமன்ற டி.வி. சேனல்களை மேலும் திறம்பட செயல்பட வைப்பது குறித்த ஆராய ஒரு கமிட்டியை நான் அமைத்துள்ளேன். கடந்த 67 ஆண்டுகளில், மாநிலங்களவை எவ்வளவோ சாதனைகளை செய்துள்ளது. இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய உள்ளது.
Image result for வெங்கையா நாயுடு
மாநிலங்களவையின் 250-வது கூட்டத்தொடரை கொண்டாடும்வகையில், 18-ந் தேதி (இன்று) 250 ரூபாய் வெள்ளி நாணயமும், ஒரு அஞ்சல் தலையும் வெளியிடப்படும்.இந்திய அரசியலில் மாநிலங்களவையின் பங்கு குறித்து விவாதம் நடத்தப்படும். அரசியல் சட்டம் ஏற்கப்பட்டதன் 70-வது ஆண்டுவிழாவை குறிக்கும்வகையில், நாடாளுமன்ற கூட்டு கூட்டம் 26-ந் தேதி நடைபெறும். இவ்வாறு வெங்கையா நாயுடு பேசினார்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *