நீங்க பாட்டுக்கு பிகில கெளப்பி விட்டுடாதீங்கடேய்..!

Image result for vadivelu

அஜித் படத்தில் வடிவேலு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதனை உறுதிப் படுத்திய பின்னர் சொல்லுங்க என்று வடிவேலு கேட்டுக் கொள்கிறாராம்!

நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வாய்மை என்ற படத்தில் அவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Image result for vadivelu

வடிவேலுவுக்கு நெருக்கமானவர்கள், இது குறித்து தகவல் அறிந்து, வாழ்த்துச் சொல்லும் போது, வெளிப்படையான அறிவிப்பு வரும் வரை எதையும் நம்ப வேண்டாம் என்று வடிவேலு கூறியுள்ளார்

Image result for vadivelu

தடைபட்டு நிற்கும் 24 ஆம் புலிகேசி படத்தில் மீண்டும் வடிவேலு நடிக்க உள்ளதாகவும் கமலஹாசன் நடிக்கும் தலைவன் இருக்கிறான் உள்பட சில படங்களில் வடிவேலு நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வருவதும் பின்னர் அவை புரளித்தனமாக சித்திரிக்கப் படுவதும் வழக்கமாகிவிட்டது!

Image result for 24pulikesi

இதனால் வடிவேலு மனம் நொந்து இருப்பதாகக் கூறப் படுகிறது. இந்நிலையில், வடிவேலு தற்போது இந்த படத்தில் தான் நடிக்க இருப்பது குறித்து வெளிப்படையான அறிவிப்பு வரட்டும் என்று காத்திருப்பதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *