பெண்களுக்கு பாதுகாப்பு தரமாட்டோம்! – கேரள அமைச்சர் கெடுபிடி!

Image result for women at sabarimala

சபரிமலை வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என கேரள அமைச்சர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Image result for women at sabarimala
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. தீர்ப்பு வெளியாகும் வரை பெண்கள் சபரிமலைக்கு செல்ல தடையில்லை என தெரிவித்திருந்த நிலையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் சபரிமலை செல்ல விண்ணப்பித்துள்ளனர்.

Image result for women at sabarimala

இந்நிலையில் பெண்களை சபரிமலையில் அனுமதிப்பது குறித்து தெரிவித்துள்ள சபரிமலை தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் ‘சபரிமலைக்கு வரும் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு தர முடியாது. நீதிமன்றத்தில் உரிய அனுமதி வாங்கி வரும் பெண்களுக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கப்படும்’ என கண்டிப்பாக சொல்லியிருக்கிறார்.

Image result for women at sabarimala

தீர்ப்பு வெளியாகும் வரை பெண்களை அனுமதிக்க கூடாது என்று சில அமைப்பினர் கேரள அரசை வலியுறுத்தி வரும் நிலையில் அமைச்சர் இப்படி சொல்லியிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *